தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உஷாரா இருக்கனும்.. சொந்த ஊருக்கே போன ஓபிஎஸ்! ஸ்லீப்பர் செல்களை களமிறக்கிய எடப்பாடி? பரபர தேனி..!

Google Oneindia Tamil News

தேனி : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட்டது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுள்ள நிலையில் பல மாவட்டங்களில் இருந்தும் அவரை சந்திக்க ஆதரவாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் தற்போது சேர்ந்த யாரும் வருகிறார்களா என்பதை உள்ளூர் நிர்வாகிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என செயல்பட்ட நிலையில் மீண்டும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இரு அணிகளும் ஒன்றிணைந்தன.

அப்போது ஆட்சி அமைக்க ஓபிஎஸ்-ன் ஆதரவு தேவைப்பட்டதால் துணை முதலமைச்சர் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி திறப்பு வழங்கி உரிய முக்கியத்துவத்தை அளித்திருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல காட்சிகள் மாறியது.

பொடி வைத்து பேசிய பொடி வைத்து பேசிய "வாரிசு" 1 மாதத்திற்கு பின் வீட்டுக்கு போனார் ஓபிஎஸ்.. ஓடோடி பார்த்த டிடிவி "தூது"

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

முதலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் பதவியை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆட்சியை இழந்த போதும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனக்கே வழங்க வேண்டும் என உறுதியாக இருந்ததோடு தனது ஆதரவாளர்கள் வட்டத்தின் மூலமாக அதனையும் சாதித்துக் கொண்டார். அதே நேரத்தில் கடந்த முறை ஓபிஎஸ்-ன் பக்கம் 15 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்து நின்ற நிலையில் நாட்கள் செல்லச் செல்ல அவரது மெத்தனப்போக்கு காரணமாக ஆதரவு வட்டம் சரியாக தொடங்கியது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இந்நிலையில் கட்சியில் இருந்தே கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நீக்கப்பட்ட நிலையில் தற்போது ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் என தனது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக போராடி வருகிறார். கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் தினமும் தனது ஆதரவாளர்கள் வழக்கறிஞர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசித்து வந்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

சொந்த ஊர் பயணம்

சொந்த ஊர் பயணம்

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது அதிமுகவில் நடைபெற்ற கலவரங்களுக்கு பிறகு தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றார் ஓபிஎஸ். சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்து அவருக்கு மதுரையே மிரளும் அளவுக்கு ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தினர். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் திரண்டு வந்திருந்த ஆதரவாளர்கள் மதுரை விமான நிலையம் குலுங்கும் அளவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

இதையடுத்து சாலை மார்க்கமாக தனது சொந்த ஊர் சென்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கு தேனி மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பெரியகுளம் சென்று அவர் தனது குடும்பத்தினர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ஓபிஎஸ் செல்ல இருப்பதாகவும் அங்கு தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த டிடிவி தினகரனுடன் தேனி மாவட்ட செயலாளர் ஆன சையது கான் சந்தித்து பேசி வரவேற்பு அளித்தது தமிழக முழுவதும் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

Recommended Video

    OPS-TTV சந்திப்பு? ரவீந்தரநாத் பதில்
    ஆதரவாளர்களுடன் ஆலோசனை

    ஆதரவாளர்களுடன் ஆலோசனை

    சையது கான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் ஓபிஎஸ்-ன் அறிவுறுத்தலின் பெயரிலேயே டிடிவி தினகரனை சையது சந்தித்ததாகவும் விரைவில் சசிகலா டிடிவி தினகரன் ஓ பன்னீர் செல்வம் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கைலாசபட்டியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய அதிமுக நிர்வாகிகளை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசி அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர் செல்வத்தை யார் யார் சந்திக்கிறார்கள் அவர்கள் தற்போது அதிமுகவில் இருக்கிறார்களா என்பது குறித்த பட்டியல் தனக்கு உடனடியாக தெரிய வேண்டும் என உள்ளூர் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    O. Panneerselvam has gone to his hometown Theni after a long time of operations including the election of Edappadi Palanichami as the sole leader of the AIADMK and his removal from the party. It is expected that supporters from many districts will come to meet him. In this situation, it is said that Edappadi Palanichami ordered that the local administrators should monitor whether any existing members of the AIADMK are coming.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X