தேனி தொகுதியில் படுஉக்கிரம்.. மாஜி வலது கரம் தங்க தமிழ்ச்செல்வனுடன் மோதும் டிடிவி தினகரன்!

Subscribe to Oneindia Tamil

தேனி: லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். டிடிவி தினகரனின் அமமுகவில் அவருக்கு மிக நெருக்கமான வலதுகரமாக செயல்பட்ட தங்க தமிழ்ச் செல்வன் பின்னர் திமுகவில் இணைந்து தற்போது வேட்பாளராகி இருக்கிறார்.

தேனி லோக்சபா தொகுதி முன்னர் பெரியகுளம் தொகுதியாக இருந்தது. பெரியகுளம் லோக்சபா தொகுதியாக இருந்த போது அதிமுகதான் 6 முறை வென்றது. காங்கிரஸ் கட்சி 4 முறையும் திமுக 2 முறையும் வென்றது.

Lok Sabha Election TTV Dhinakaran fights against DMK s Thanga Tamil Selvan in Theni

பெரியகுளம் லோக்சபா தொகுதியாக இருந்த போது பெரியகுளம், கம்பம், தேனி, போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, சேடப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தற்போதைய தேனி லோக்சபா தொகுதியில் சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

2009-ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதி முதன் முதலாக லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜே.எம்.ஆரூண் வென்று எம்பியானார். 2014, 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் ஆர். பார்த்தீபன், ரவீந்தரநாத் குமார் ஆகிய அதிமுக வேட்பாளர்களே வென்றனர். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அண்ணா திமுக வெற்றி பெற்ற ஒரே ஒரு இடம் தேனி தொகுதி மட்டும்தான். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் குமார்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவின் ரவீந்தரநாத் குமார் 5,04,813 (43.02%) வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் வேட்பாளரான மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தோற்கடித்தார். அத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்குகள் 4,28,120 (36.48%). 2019-ம் ஆண்டு தேர்தலிலும் தேனி தொகுதியில் அமமுக போட்டியிட்டது. அத்தேர்தலில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டவர் தங்க தமிழ்ச்செல்வன். அப்போது 1,44,050 வாக்குகளை (12.28%) தங்க தமிழ்ச் செல்வன் பெற்றிருந்தார். இந்த தங்க தமிழ்ச்செல்வன் இப்போது திமுக வேட்பாளராக களமிறங்குகிறார். அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனே இம்முறை பாஜக கூட்டணி வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்து களம் காண்கிறார்.

அதற்கு முந்தைய 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவின் பார்த்தீபன் 5,71,254 வாக்குகளையும் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் மதுரை பொன்.முத்துராமலிங்கம் 2,56,722 வாக்குகளையும் மதிமுகவின் அழகுசுந்தரம் 1,34,362, காங்கிரஸின் ஜேஎம் ஆரூண் 71,432 வாக்குகளையும் பெற்றிருந்தார். இம்முறை திமுக, காங்கிரஸ், மதிமுக அனைத்தும் கூட்டணியாக களம் காண்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+