உலக ஊடகங்களில் பதிவான தேனி சிறை சம்பவம்.. தமிழகத்திற்கு நேர்ந்த உலகளாவிய கெட்டபெயர்

Subscribe to Oneindia Tamil

தேனி: தமிழ்நாட்டின் பண்பாடும், பாரம்பரியமும், கலாச்சாரமும் வெளிநாட்டு மீடியாக்களால் பேசப்படுவதுதான் நமது மாநிலத்தின் பெருமை. ஆனால், சமீபத்தில் தேனியில் சிறை கைதிகள் தப்பிய சம்பவம் பிபிசி உட்பட பல சர்வதேச மீடியாக்கள் கவர் செய்திருக்கின்றன. இது நமது மாநிலத்தின் மரியாதையை அப்படியே குறைத்திருக்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் மகளிர் இலவச பேருந்து பயணம், தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் கொள்கை உள்ளிட்டவற்றை புகழ்ந்து பிபிசி ஆங்கில செய்தி ஊடகத்தில் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. இப்படி போற்றி பாராட்டப்பட்ட தமிழ்நாடு, தேனி சிறைக்கைதிகளின் ஒரே சம்பவத்தால் மொத்த நற்பெயரையும் இழந்திருக்கிறது.

Theni Jailbreak

கைதிகள் தப்பியதற்கு, மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது பிபிசி கேள்வி எழுப்பியிருக்கிறது. அதாவது, தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள கிளை சிறையில் கடந்த திங்கட்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அங்குள்ள ஒரு செல்லில் அடைக்கப்பட்டிருந்த 18 விசாரணை கைதிகளில் ஒருவர், தனக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது போல போலியாக நடித்து துடித்துள்ளார். மற்ற கைதிகள் உதவி கேட்டு சத்தம்போட்டதில்.. அங்கு வந்த சிறை காவலர் ஒருவரை கைதிகள் அனைவரும் சேர்ந்து தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்த மேலும் இரண்டு காவலர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த முக்கிய சாவிகளை பறித்துக் கொண்டு.. மெயின் கேட்டை திறந்து 17 கைதிகள் தப்பி ஓடினர். ஒரு கைதி உடனடியாக சிறைக்கே திரும்பி விட்டார். ஆனால் அவர்களின் தாக்குதலில் பல சிறை ஊழியர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தனிப்படை போலீசாரால் 36 மணி நேரத்தில் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும்.. மறுபுறம், கைதிகள் தப்பித்து போக காரணம் மாநில நிர்வாகத்தின் குறைபாடுகள்தான் என பிபிசி விமர்சித்திருக்கிறது.

அதாவது விதிமுறைகளின் படி, 200 கைதிகளுக்கு 34 காவலர்கள் (1:6) பணியில் இருக்க வேண்டும். ஆனால், சம்பவம் நடந்த இரவில்.. வெறும் 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். இதனால் கைதிகள் 3 அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி தப்பித்திருக்கின்றனர். இதில் சிறை ஊழியர்களில் யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா? என்கிற கேள்வியை பிபிசி எழுப்பியிருக்கிறது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிபிசி, இந்தியாவில் உள்ள சிறைகளில் நிலவும் முக்கியமான குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருக்கிறது. குறிப்பாக தேனி கிளை சிறையின் மொத்த கொள்ளளவு 200 கைதிகள் அடைக்கும் அளவு மட்டுமே இருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தின்போது அங்கு 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்த போது, அதிகாரிகளால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போனது என்று பிபிசி கூறுகிறது. மேலும், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2023 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, இந்திய சிறைகளில் சராசரி கொள்ளளவு விகிதம் 120.1% உள்ளது என்று பிபிசி மேற்கோள் காட்டி இருக்கிறது.

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மொத்த கைதிகளில் 73 சதவீதத்திற்கும் அதிகமானோர், விசாரணை கைதிகள்தான். காவல் துறை விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளில் ஏற்படும் அதீத காலதாமதம் காரணமாகவே பல ஆண்டுகள் மக்கள் சிறைகளில் முடங்கி கிடக்க நேரிடுகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் பிபிசி குறிப்பிட்டு இருக்கிறது.

இப்படி, இவ்வளவு குறைகள் இருப்பதால்தான் கைதிகள் தப்பிக்க எளிதாக இருக்கிறது என்று பிபிசி விமர்சித்து எழுதியிருக்கும் செய்தி, மொத்த தமிழ்நாட்டின் மரியாதையையும் குறைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+