தேனி லோக்சபா தொகுதி: அண்ணா திமுக கோட்டையை அசைக்கப் போவது மாஜி எம்பியா? மாஜி சிஷ்யரா?

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி லோக்சபா தொகுதி அதிமுக கோட்டையாக இருந்தாலும் இப்போது திமுக, அமமுக வேட்பாளர்களாக காண்பவர்கள் அந்த கட்சியில் இருந்து வெளியேறியவர்கள். இதனால் அதிமுக கோட்டையை காப்பாற்றுமா? இழக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: சோழவந்தான்(தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம். தேனி என்ற பெயரில் சட்டசபை தொகுதி இல்லை. ஆனால் லோக்சபா தொகுதிக்கு தேனி என பெயரிடப்பட்டுள்ளது.

Theni Lok Sabha constituency Candidate List Assembly Constituencies Voters Count and Election Results

தேனி லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்- 16,12,503; ஆண்கள்- 7,92,195; பெண்கள்- 8,20,091; 3-ம் பாலினத்தவர்- 217

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

ஜே. எம். ஆரூண்ரஷீத்(காங்கிரஸ்) 3,40,575
தங்க தமிழ்ச்செல்வன்( அஇஅதிமுக) 3,34,273
சந்தானம்( தேமுதிக) 70,908

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

இரா. பார்த்தீபன்(அஇஅதிமுக) 5,71,254
பொன். முத்துராமலிங்கம் (திமுக) 2,56,722
அழகுசுந்தரம்(மதிமுக) 1,34,362
ஜே. எம். ஆரூண்ரஷீத் (காங்கிரஸ்) 71,432

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

இரவீந்திரநாத் குமார்(அஇஅதிமுக) 5,04,813
ஈவேகிஎஸ் இளங்கோவன்(காங்கிரஸ்) 4,28,120
தங்க தமிழ்ச்செல்வன் (அமமுக) 1,44,050
ஷாகுல் ஹமீத்(நாம் தமிழர் கட்சி ) 27,864
எஸ். இராதாகிருஷ்ணன் (மக்கள் நீதி மய்யம்) 16,879

2024-ம் ஆண்டு களத்தில்

தங்க தமிழ்ச் செல்வன் (திமுக)
நாராயணசாமி (அதிமுக)
டிடிவி தினகரன் (அமமுக பாஜக)
மதன் ஜெயபால் (நாம் தமிழர் கட்சி)

தேனி தொகுதி நிலவரம்: அண்ணா திமுகவின் கோட்டையாக 8 முறை வென்ற தொகுதி. திமுக 2 முறையும் காங்கிரஸ் 2 முறையும் வென்ற தொகுதி. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வென்ற ஆண்டிபட்டி தேனி லோக்சபா தொகுதிக்குள் வருகிறது. தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வென்ற போடி நாயக்கனூர் தொகுதியும் தேனி லோக்சபா தொகுதியில்தான் இருக்கிறது.
2004, 2009 ஆகிய 2 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் ஜேஎம் ஆரூண் தொடர்ந்து வென்றார். 1999-ம் ஆண்டு தேனி லோக்சபா தொகுதியில் வென்ற அதிமுகவின் டிடிவி தினகரன் இப்போது அமமுக (பாஜக கூட்டணி) வேட்பாளராக களம் காண்கிறார். அதிமுக, அமமுக வேட்பாளராகப் போட்டியிட்ட தங்க தமிழ்ச் செல்வன் இப்போது திமுக வேட்பாளராக களம் காண்கிறார். இதனால் தேனி லோக்சபா தொகுதி களம் தகித்துக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+