என் மகன் மீது போலீஸ் மிருகத்தனமான தாக்குதல்! தேனி சிறை கைதி மீனாட்சி சுந்தரத்தின் தாய் கண்ணீர் மனு

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தின் பின்னணியில், சிறை நிர்வாகத்தின் அத்துமீறல்களும் கைதிகள் மீதான தாக்குதல்களும் தான் காரணம் என்று கூறி, சம்பந்தப்பட்ட கைதி மீனாட்சி சுந்தரத்தின் தாயார் தமிழக முதலமைச்சருக்கு அவசர கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Theni prison

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எனது மகன் உள்ளிட்ட கைதிகளுக்கு, சிறையில் வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்தது. அதில் புழுக்கள் கிடந்தது.

இது குறித்து சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்த கைதிகளை, சிறை அலுவலர்கள் கொடூரமாக தாக்கி தனிமைச் சிறையில் அடைத்ததே அவர்கள் தப்பி ஓட முதன்மைக் காரணம் என்று மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள்

மேலும், சிறையில் கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் பொருட்களை சிறை அலுவலர்கள் பறித்துக் கொள்வதாகவும், நேர்காணல் அனுமதிக்காக சட்டவிரோதமாக பணம் பறிப்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளான நிலையிலேயே, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட கைதிகள் சிறையை விட்டு தப்பியுள்ளனர்.

தப்பியது தவறு

இருப்பினும், தப்பியோடியது தவறு என்பதை உணர்ந்து மீனாட்சி சுந்தரம் காவல்துறையினரிடம் தானாக முன்வந்து சரணடைந்தார். ஆனால், அவர் மீண்டும் தேனி சிறையில் அடைக்கப்பட்ட போது, சிறைக் காவலர்கள் அவரை மிருகத்தனமாக தாக்கியதில் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நீதித் துறை விசாரணை

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சிறையில் படுகாயமடைந்துள்ள தனது மகனுக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதியின் தாயார் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி சிறை கைதிகள்

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் இருந்து கடந்த 26ஆம் தேதி 17 பேர் தப்பியோடினர். அதாவது அன்றைய தினம் ஒரு கைதி வலிப்பு வந்தது போல் நடிக்க, மற்ற கைதிகள் கூச்சலிட்டனர். அப்போது என்னவென பார்க்க சென்ற சிறைத் துறை காவலர் ஸ்டாலின் பிரபுவை கைதிகள் தாக்கினர்.

சாவிகளை பறித்து தாக்குதல்

இதையடுத்து அங்கிருந்த மற்ற காவலர்களையும் அவர்கள் தாக்கி, அவர்களிடம் இருந்து சாவிகளை பறித்துவிட்டு நுழைவுவாயில் வழியாக தப்பிவிட்டனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனிப்படை அமைத்து தப்பிய கைதிகளை தேடும் பணிகள் நடந்தன. அப்போது பிரவீன் குமார் என்பவர் சிறைக்கு அருகே பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசன், ராஜாசிக்கந்தர், ராஜ்குமார், மாற்றுத் திறனாளி கைதியான பிரசாந்த் என்ற லிங்கபிரசாத் உட்பட மொத்தம் 5 பேர் நேற்று முன்தினம் பிடிபட்டனர்.

பிடிப்பட்டவர்கள்

இதையடுத்து சிறையை சுற்றியிருந்த வனப்பகுதியில் டிரோன் கேமராவை வைத்து கைதிகளை தேடினர். அப்போது அங்கு பதுங்கி பதுங்கி தப்பிய கருப்பசாமி, தருண்குமார், பாண்டிச்செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக் ராஜா, சோலை முகிலேஸ்வரன் ஆகிய 8 பேர் சிக்கினர். மொத்தம் 13 பேர் சிக்கியிருந்த நிலையில் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பொன்முத்து, ரெஜின் ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சிக்கிய கைதிகளின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்தது.

மலையடிவாரத்தில் சகோதரர்கள்

மீதமுள்ள திருப்பதி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் சகோதரர்கள், இவர்கள் பதுங்கியிருந்த பகுதிக்கு போலீஸார் சென்ற போது அவர்கள் மலையில் இருந்து வேறு வழியாக மலையடிவாரத்திற்கு ஓடினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர்களை தாக்கிவிட்டு பைக்கை பறித்துச் சென்றனர். அப்போது இந்த இரண்டு பேர் மட்டுமே பிடிபடாமல் இருந்ததால் போலீஸார் தரப்பில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர்.

கைதிகளின் தாய்

இந்த நிலையில் அவர்களை தேடும் பணியை போலீஸார் இரு கைதிகளின் தாய் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் என் இரண்டு மகன்கள் மீது பொய் வழக்கு போடாதீர்கள். அவர்களுக்கு எந்த சேதமும் இன்றி நீதிமன்றத்தில் ஒப்படையுங்கள். என் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

8 மாத கர்ப்பிணி

எனது மூத்த மகன் மீனாட்சி சுந்தரத்தின் மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆகவே எனது மகன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது" என்று அதில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரு கைதிகளும் 28ஆம் தேதி வடலூர் காவல் நிலையத்தில் சரணடைய வருவதாக சொல்லப்பட்ட நிலையில் அவர்களை வரும் வழியிலேயே கைது செய்தனர். இதன் மூலம் தப்பிய 17 கைதிகளும் பிடிபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+