பிறந்த ஒரே நாளில் குழந்தையைப் பறி கொடுத்த போலீஸ்.. லீவும் இல்லை.. தற்கொலை முயற்சி.. ஆடியோ வைரல்
நெல்லை: மனைவியின் பிரசவத்திற்கு பின் குழந்தை இறந்த நிலையில் மேலதிகாரி விடுமுறை தராததால் தற்கொலை செய்யப்போவதாக ஆயுதப்படை காவலர் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Recommended Video
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 29ம் தேதி இவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் 7 மாத கர்ப்பிணியான மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். உடனே கடலூருக்கு வரும்படியும் குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள்.
நெல்லை ஆயுதப்படையில் உள்ள இன்ஸ்பெக்டர் டேனியலிடம் 4 நாட்கள் விடுப்பு தரும்படி அலெக்ஸ் போனில் கேட்டுள்ளார். அதற்கு அவர், நீங்கள் 4 நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு சென்ற பிறகு நிலைமையை கூறுங்கள். அதைப் பொறுத்து விடுப்பை நீட்டித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறேன்.

4 நாட்கள் விடுப்பு
அதன் பேரில் 4 நாட்கள் விடுப்பு எடுத்து அலெக்ஸ் கடலூருக்கு சென்றுவிட்டார். அங்கு அவரது மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு அறுவை சிகிச்சை முடிந்து தாயும், சேயும் நலமாக இருந்தனர். ஆனால் மறுநாளே குழந்தை இறந்துள்ளது. இதையடுத்து அலெக்ஸ் மீண்டும் இன்ஸ்பெக்டர் டேனியலுக்கு போன் செய்து, ஒரு வாரம் விடுப்பை நீட்டிக்கும்படி கூறியிருக்கிறார்.

வேலையில் சேர்ந்தார்
ஆனால் 6ம் தேதி உள்ளாட்சி தேர்தல் இருந்ததால் விடுப்பை நீட்டிக்க இன்ஸ்பெக்டர் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அலெக்ஸ், தேர்தலுக்கு முன்னதாக வேலையில் சேர்ந்து இருக்கிறார் அவருக்கு பாபநாசம் அணை பாதுகாப்பு பணி டூட்டி போடப்பட்டுள்ளது.. அதன்பேரில் அங்கு பணிக்கு சென்றார்.

2 நாள் விடுப்பு
தேர்தல் முடிந்ததும் 7ம் தேதி கடலூர் செல்வதற்காக மீண்டும் குறிப்பிட்ட இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு விடுப்பு கேட்டிருக்கிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே அலுவலகத்தில் இருந்து அவருக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 2 நாள் விடுப்பு எடுத்துச் செல்லலாம் என்று கூறப்பட்டிருந்தது.

செல்போன் டவர் இல்லை
இதனால் மன உளைச்சல் அடைந்த அலெக்ஸ் செல்போனில் அவரது குமுறலை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த ஆடியோவில் "என்னை வேண்டும் என்றே பழிவாங்க பாபநாசம் அணை பகுதியில் டியூட்டி போட்டுள்ளனர். அங்கு செல்போன் டவர் கிடைக்காது. இதனால் எனது மனைவியிடம் பேச முடியவில்லை.

இன்ஸ்பெக்டர் டேனியல்
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் இருக்கும் மனைவி என்னுடைய போன் வராததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். எனக்கு லீவு கொடுக்கக் கூடாது என்பதற்காக என்னுடைய போனை இன்ஸ்பெக்டர் டேனியல் எடுக்கவில்லை. இதனால் நான் தற்கொலை செய்யப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.

பதற்றம்
இந்நிலையில் அலெக்ஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அவரது அறை வெளிப்புறமாக பூட்டி உள்ளது. அலெக்ஸ் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அலெக்சின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு என்ன ஆனது, அவர் என்ன முடிவெடுத்தார் என்பது தெரியாமல் பதற்றமாக உள்ளது. இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிபி அழைத்து பேசினார்
முன்னதாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அருணாசலம் என்பவர் ஆடியோ வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார். அவர் வெளியிட்ட ஆடியோவில், 'நேர்மையாகப் பணியாற்றும் எனக்கு அதிகாரிகள் கொடுக்கும் டார்ச்சர் மற்றும் பணிச்சுமை காரணமாக என் இதயத் துடிப்பு நின்று விடும் நிலை உள்ளது' என்று உருக்கமாகப் பேசியிருந்தார். அந்த சமயத்தில் நெல்லைக்கு வந்திருந்த காவல்துறை டி.ஜி.பி-யான சைலேந்திரபாபு அவரை அழைத்து ஆறுதலாகப் பேசி அனுப்பினார். இந்த சூழலில் நெல்லையில் புதிதாக ஒரு காவலர் தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications