செங்கோட்டையன் எங்கே?.. நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பா? - நயினார் நாகேந்திரன் பதில்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும். அவர்கள் அழைத்தால் நானே போய் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். தேவைப்பட்டால் நானே போய் அழைப்புக் கொடுப்பேன் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த திமுக அரசு போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்கிற அரசாக உள்ளது. தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் கொஞ்சமாகவாக நடக்கிறது, ஆளும்கட்சி தரப்பில் எல்லாம் மிரட்டல்கள் நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார்.

nainar-nagendran-says-those-who-left-the-bjp-alliance-should-unite

கூட்டணியில் சேர வேண்டும்

செங்கோட்டையன் டெல்லி சென்றார் என்றால் அதற்கு நான் எப்பதி பதில் சொல்ல முடியும். அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறாரா என்பது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சி செய்யும்போது அனைத்து மாநிலங்களின் ஆட்சியையும் 90 முறை ஆட்சியைக் கலைத்திருக்கின்றனர். அது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். எங்களுடைய வழக்கம் அதுவல்ல.

இன்றைக்கும் நாங்கள் அகில இந்திய அளவில் கூட்டணிக்கு முக்கிய மந்திரி சபைகளை கொடுத்திருக்கிறோம். கூட்டணியை வளர்ப்பதே எங்களின் நோக்கம். காங்கிரஸ் கட்சிதான் துண்டாடும் கட்சி.

தமிழக பாஜக சார்பில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். தேவைப்பட்டால் நானே அவர்களிடம் நேரடியாக சென்று பேசுவேன் என்று சொல்லி இருக்கிறேன். அவர்கள் அழைத்தால் நானே போய் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். தேவைப்பட்டால் நானே போய் அழைப்புக் கொடுப்பேன்.

செங்கோட்டையன் எங்கே?

அதிமுக கூட்டணி எங்கள் கூட்டணியில் இருக்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் ஒரு முடிவை எடுத்துள்ளார். செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டுள்ளார். எங்களை பொறுத்த வரை, அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் உடனடியாக சென்று சந்திக்க முடியாது. 11 ஆம் தேதி கண்டிப்பாக நான் டில்லி செல்கிறேன். செங்கோட்டையன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

செங்கோட்டையனை பாஜகதான் தூண்டி விடுகிறது என்பது குறித்த கேள்விக்கு, மீடியா உள்பட எல்லாவற்றையும் தூண்டிவிடுவது திமுக தான் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து ஏற்கனவே வெள்ளை அறிக்கை கேட்டிருந்தோம். ஆனால் அவர் பதிவு மட்டுமே போட்டுக் கொண்டு இருக்கிறார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+