சர்க்கரை நோய் குணப்படுத்தக் கூடியதா?.. நெல்லை முதியவர்களை தவறாக வழிநடத்தும் கேபிள் டிவி விளம்பரம்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஒரு கேபிள் டிவி விளம்பரத்தில் சர்க்கரை வியாதி குணப்படுத்தக் கூடியது என்ற விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை நம்பி சர்க்கரை நோய்க்கான மாத்திரையை யாராவது போடாமல் விட்டுவிட்டால் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு ஆகிய நோய்கள் கட்டுப்படுத்த முடியுமே தவிர அவை வந்துவிட்டால் முற்றிலும் குணப்படுத்த முடியாது. எனவே மாத்திரை மருந்துகள் மூலம் இந்த நோய்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு வேளை ரத்த கொதிப்பு அதிகரித்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும். மேலும் சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்படும். அது போல் நீரிழிவு நோய் அதிகரித்தால் உடலில் உள்ள காயங்கள் எளிதில் ஆறாது. அது போல் சிலருக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாமல் புண்ணாகும் கால், கைகளை துண்டிக்கும் நிலை கூட ஏற்படலாம். எனவேதான் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்து மருத்துவர்கள் கூறினாலும் எப்படியாவது இந்த நோய்கள் நம் உடலை விட்டு போகுமா என பலர் முயற்சித்து மாற்று மருத்துவம் என்ற பெயரில் போலியாக விற்பனையாகும் மருந்துகளை அதிக பணம் கொடுத்து நம்பி ஏமாறுகிறார்கள். சிலருக்கு உடலில் தாக்கமும் ஏற்படுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாமே தவிர குணப்படுத்த முடியாது. காலத்திற்கும் மருந்து சாப்பிட வேண்டும், உணவு கட்டுப்பாடு அவசியம், உடற்பயிற்சி ஆகியவை செய்ய வேண்டும் என்பதற்காகவே மக்கள் சிலர் குறுக்கு வழியில் விடை தேட நினைத்து ஏகப்பட்ட சிக்கலில் சிக்கி கொள்கிறார்கள்.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒரு கேபிள் டிவி நிறுவனம் மூத்த குடிமகன்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் போடுவதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு முதியவர், என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, காரணம் சர்க்கரை வியாதி, எத்தனையோ டாக்டர்கள் கிட்ட பார்த்துட்டேன். பணம் செலவு செய்துட்டேன்.
ம்ம்ம் இதை நம்பி மாத்திரை போடாதவங்க நிலை என்ன ஆகும்? @Subramanian_ma @Collectortnv
— சுரேகா 🦋💕 (@Puravi12) June 25, 2023
ஆனாலும் குணமாக முடியவில்லை. அப்போதுதான் இந்த மருந்தை 2 மாதங்கள் சாப்பிட்டேன். இப்போது சர்க்கரை வியாதி இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன் என கூறி ஒரு மருந்து டப்பாவை அந்த முதியவர் காட்டுகிறார். சர்க்கரை வியாதி குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார். இது தவறான கருத்து. இந்த கேபிள் டிவி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு மற்றவர்கள் மருந்து சாப்பிடாமல் விட்டால் என்ன ஆவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Diabetic is "curable" desease? Nellai Tuticorin dist villages became senior citizens hub and this cable TV Advertisement misleading senior citizens. Contact number is there. Any Action? .@Collectortnv .@Subramanian_ma .@mkstalin This 1 got frm Tisayanvilai pic.twitter.com/tJObviYkOK
— சுரேகா 🦋💕 (@Puravi12) June 25, 2023












Click it and Unblock the Notifications