இருட்டுக்கடை அல்வா இனி அமெரிக்காவிலும்! நெல்லை அல்வாவை எப்படி ஆர்டர் செய்வது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலி என்றாலே நெல்லையப்பர் கோவிலும், உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வாவும் நினைவுக்கு வரும்... தலைமுறைகள் கடந்தும் தனித்துவமான சுவையால் ரசிகர்களைக் கவரும் இந்த அல்வா, இப்போது கடல் கடந்து அமெரிக்காவிலும் கிடைக்க தொடங்கியுள்ளது. அங்கு வசிக்கும் தமிழர்கள் இந்த அல்வாவை எப்படி ஆர்டர் செய்து வாங்கலாம் தெரியுமா?

திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இந்த அல்வா, தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Iruttukadai Halwa in America

இருட்டுக்கடை அல்வா

1930களில் கடை தொடங்கப்பட்டபோது ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் இயங்கியதால் "இருட்டுக்கடை" என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் பெயர்ப் பலகைகூட இல்லாமல், தனது தனித்துவமான சுவையால் இந்தக் கடை புகழ்பெற்று விளங்குகிறது.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் தனிச்சிறப்பே அதைத் தயாரிக்கும் முறையில்தான் இருக்கிறது. அல்வாவுக்கு தேவையான கோதுமையை கைகளால் அரைத்து, அல்வாவையும் கைப்படத் தயாரிக்கிறார்கள்... இதனால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே தயாரிக்க முடிகிறது. இருந்தாலும், தரம் குறையக் கூடாது என்பதற்காக மெஷின்களைப் பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையையே பின்பற்றுகிறார்கள்.

நெல்லை அல்வா ருசி

மேலும், முந்திரி போன்றவற்றைச் சேர்க்காமல் அல்வாவின் அசல் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கும் இந்த அல்வா மீது தனி விருப்பம் உண்டு. ஆனால், நெல்லையில் கிடைக்கும் அசல் இருட்டுக்கடை அல்வாவை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றால், இதுவரை பலருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

அமெரிக்காவில் அல்வா

இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் அல்வா பிரியர்கள் இனி அசல் இருட்டுக்கடை அல்வாவைத் தேடி அலைய வேண்டியதில்லை என்று கடையின் நிர்வாகி கவிதா சிங் அறிவித்துள்ளார். ஆம், இதற்காகவே அமெரிக்காவில் தனி விநியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை மையமாகக் கொண்டு அல்வா விநியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து அமெரிக்காவின் மற்ற மாகாணங்களுக்கும் இருட்டுக்கடை அல்வாவை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள், தங்களுக்குப் பிடித்தமான நெல்லை அல்வாவை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள முடியும்.

ஆர்டர் செய்வது எப்படி

அமெரிக்காவில் வசிக்கும் அல்வா பிரியர்கள், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை ஆர்டர் செய்து வாங்குவதற்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்: +1 248-250-3200

நெல்லையின் பாரம்பரிய சுவை அமெரிக்காவிலும் கிடைக்கத் தொடங்கியிருப்பது, அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இனி தங்களுக்குப் பிடித்த இருட்டுக்கடை அல்வாவை வாங்கிச் சுவைக்க அமெரிக்காவிலேயே வாய்ப்பு கிடைத்துள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+