Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களத்தில் நயினார் நாகேந்திரன்.. பாஜக வசமாகிறதா நெல்லை? காங்கிரஸ் சொதப்பினால் அவ்வளவு தான்! களநிலவரம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. பாஜக எம்எல்ஏவாக உள்ள நயினார் நாகேந்திரன் நெல்லை லோக்சபா தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அந்த தொகுதியில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவாரா? களநிலவரம் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 19 தொகுதிகளை வழங்கி உள்ளது. பாஜக மீதமுள்ள 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Lok Sabha election 2024 Is Nainar Nagendran will win over Congress and ADMK Candidates in Nellai parliament seat details here

இந்நிலையில் தான் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இந்த பட்டியலில் மொத்தம் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை தொகுதியில் அண்ணாமலை, நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், தென்சென்னையில் தமிழிசை சவுந்தராஜன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம், கிருஷ்ணகிரியில் நரசிம்மன், ஆகியோர் போட்டியிட உள்ளனர். மேலும் பெரம்பலூர் தொகுதியில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐஜேகே தலைவர் பாரிவேந்தரும், வேலூரில் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏசி சண்முகம் போட்டியிட உள்ளனர். இந்த பட்டியலில் முதலில் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் மாற்றம் செய்யப்ட்டது. நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் நெல்லை லோக்சபா தொகுதியில் நயினார் நாகேந்திரன் வெல்லவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நெல்லை லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் மொத்தம் நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையம்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் நெல்லை எம்எல்ஏவாக நயினார் நாகேந்திரன் உள்ளார். ஆலங்குளம் (எம்எல்ஏ பெயர்மனோஜ் பாண்டியன்), அம்பாசமுத்திரத்தில் (இசக்கி சுப்பையா) அதிமுக வசம் உள்ள நிலையில் பாளையங்கோட்டை (அப்துல் வஹாப்), ராதாபுரம் (சபாநாயகர் அப்பாவு) சட்டசபை தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் உள்ளன. நாங்குநேரியில் (ரூபி மனோகரன்) மட்டும் காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளார்.

இதுதவிர நெல்லை தொகுதி எம்எல்ஏவாக ஏற்கனவே அதிமுக சார்பில் 2001, 2011 தேர்தல்களில் நயினார் நாகேந்திரன் இருந்துள்ளார். அதிமுகவில் இருந்து அவர் பாஜகவில் இணைந்து 2021 தேர்தலில் நெல்லையில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏவாகி உள்ளார். நயினார் நாகேந்திரனை பொறுத்தமட்டில் அவர் தொகுதி மக்களிடம் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளார். அதோடு அனைத்து தரப்பு மக்களிடமும் நெருங்கி பழகும் குணத்தை கொண்டுள்ளார்.

இதனால் தான் அதிமுகவில் இருந்து விலகினாலும் பாஜகவில் போட்டியிட்டாலும் கூட அவர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் அவர் இப்போது பாஜகவில் இருந்தாலும் கூட பல அதிமுக தலைவர்களுடன் நல்லுறவை பேணிக்காத்து வருகிறார். இது அவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கு என்பது கன்னியாகுமரியில் மட்டுமே அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சில தொகுதிகளில் பாஜகவின் செல்வாக்கு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதில் கோவை, தென்காசி வரிசையில் நெல்லையும் உள்ளது. இதுவும் நயினார் நாகேந்திரனுக்கு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.

மேலும் நெல்லை தொகுதியை பொறுத்தமட்டில் தற்போது சிட்டிங் எம்பியாக திமுகவின் ஞானதிரவியம் உள்ளார். ஆனால் வரும் லோக்சபா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த தொகுதியை திமுக தனது கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இது நயினார் நாகேந்திரனுக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் நெல்லை லோக்சபா தொகுதியை எடுத்து கொண்டால் பாளையங்கோட்டை தொகுதியில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர். அதேபோல் கிறிஸ்தவர்களும் பரவலாக நெல்லை லோக்சபா தொகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டு என்பது நயினார் நாகேந்திரனுக்கு கிடைக்குமா? என்பது கேள்விக்குறி தான். பொதுவாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் திமுக, காங்கிரஸ் பக்கம் உள்ள நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் நயினார் நாகேந்திரன் நெல்லையை சேர்ந்தவர். மண்ணின் மைந்தராக உள்ளார். ஆனால் காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி ராமசுப்பு, திருச்சி எம்பி திருநாவுக்கரசர், மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ வேல்துரையின் மகன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இவர்களில் பீட்டர் அல்போன்ஸ் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர். திருநாவுக்கரசரும் நெல்லையை சேர்ந்தவர் இல்லை. இதனால் அவர்களுக்கு வாய்ப்பளித்தால் நெல்லை மக்கள் ஓட்டளிப்பார்களா? என்ற சந்தேகம் உள்ளது. மாறாக முன்னாள் எம்பி ராமசுப்பு, வேல்துரையின் மகன் நெல்லையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட இதில் ஒருவருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்குமா? என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.

மேலும் சிட்டிங் எம்பியான திமுகவின் ஞானதிரவியத்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படாததால் அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதவிர நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் இடையே ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் அது காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.

மேலும் நெல்லையில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக உள்ளார். இவர் திமுகவில் இருந்து சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நிலையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் சிம்லா முத்துசோழன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் கூட அவர் சென்னையில் வசித்து வருகிறார். இருப்பினும் திமுகவின் துணைபொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் என்ற அடிப்படையில் சிம்லா முத்துச்சோழனுக்கு எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் வாய்ப்பு வழங்கி உள்ளார்.

மேலும் சிம்லா முத்துசோழன் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர். மேலும் டயோசீசன் அளவில் அவருக்கு நல்ல தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரும் கிறிஸ்தவ ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளது. இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி நெல்லையில் பலம் வாய்ந்த வேட்பாளரை களமிறக்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் வெல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+