• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

திடீர் திருப்பம்.. உமா மகேஸ்வரி படுகொலையில்.. திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கைது!

|
  நெல்லை முன்னாள் மேயர் கொலையில் குற்றவாளி கைது-வீடியோ

  நெல்லை: கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில், நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரை கொன்றது யார் என்று போலீசார் பிடித்து விட்டார்கள். திமுக பெண் பிரமுகர் மகன் கார்த்திகேயன்தான் இந்த கொலைகளை செய்தது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான கார்த்திகேயனுடன் சேர்த்து 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

  கடந்த 23-ம் தேதிதான் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு வேலைக்கார பெண் என 3 பேரும் கொல்லப்பட்டனர். நடந்த கொலையே ரொம்ப பயங்கரமாக இருந்தது.

  உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் அளவுக்கு கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது. கணவரின் உடம்பெல்லாம் எண்ணவே முடியாத அளவுக்கு கத்தி குத்துகள். அவ்வளவு ஆவேசமாக குத்தி துளைத்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூமில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

  தடயங்கள்

  தடயங்கள்

  வந்தவர்கள் உமா மகேஸ்வரிக்கு தெரிந்தவர்கள் என்று கருதப்பட்டது. ஏனெனில் ஹாலில் உட்கார்ந்து தண்ணீர் குடித்திருக்கிறார்கள். கடைசிவரை தங்கி சென்று தடயங்களையும் அழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதனால் போலீசாருக்கு எந்த க்ளூவும் அந்த வீட்டில் கிடைக்கவில்லை என்பது பெரிய மைனசாக இருந்தது. அடுத்ததாக வீட்டில் கேமராவும் இல்லை.

  யார் அது?

  யார் அது?

  30 கோடிக்கு சொத்து இருந்தாலும், 25 கோடி ரூபாய் சொத்து கொஞ்சம் வில்லங்கம் கொண்டது என்பதால், சொத்துக்கான கொலையாக இது பார்க்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தர ஏமாற்றம் அடைந்ததால், அரசியல் ரீதியான கொலையாக இது பார்க்கப்பட்டது. கணவரின் வீட்டு பக்கம் நிறைய பிரச்சனை சொத்து விவகாரத்தில் இருந்து வந்ததால், இது குடும்ப தகராறாகவும் பார்க்கப்பட்டது. டெக்னிக்காக கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்தால் வடமாநில ஆட்கள்நகை, பணத்துக்காக செய்திருக்கலாம் என்றும் பார்க்கப்பட்டது. வீட்டில் வேலைக்காரியை திடீரென வேலையை விட்டு நிறுத்தி வேறு ஒருவரை வேலைக்கு வைத்ததால், அதனால் பழிவாங்கும் கொலையாக இது பார்க்கப்பட்டது.

  கைது?

  கைது?

  இப்படி எத்ததனையோ விதங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி, கொலையாளியை பிடிக்க திணறி வந்தனர். இந்தசூழலில்தான் கொலையாளியை பிடித்துவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த கைது அதிகாரப்பூர்வமானது இல்லை என்று சொல்லப்படுகிறது.

  சைக்கோ

  சைக்கோ

  இந்நிலையில் அந்த பகுதியில் ஹோட்டல் சிசிடிவி காட்சியை ஆராய்ந்தபோது, "2006ம் ஆண்டு TN 07" எனும் எழுத்தில் தொடங்கும் ஒரு ஸ்கார்பியோ கார்தான் தடயமாக சிக்கி உள்ளது. இந்த காரின் ஓனர் மீது கயத்தாறு, நெல்லை மாவட்டங்களில் ஏகப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியாம். கொலைக்குக் காரணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரமாக இருக்கக் கூடும் என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

  செல்போன்

  செல்போன்

  இந்த கார் அந்த பகுதியில் ரொம்ப நேரம் நின்றிருக்கிறது. மேலும் ஒரு செல்போன் நம்பர் அந்த டவரில் அதிக நேரம் பேசியதாக காணப்பட்டது. கார் மற்றும் செல்போன் நம்பர் இரண்டுமே ஒரே நபருக்கு சொந்தமானது என்பதை வைத்துதான் விசாரணை ஆரம்பமாகி உள்ளது. அதன்படி கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்தான் இந்த கொலைகளின் முக்கிய குற்றவாளி ஆவார். திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன்தான் இந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலைகளை செய்தது தான்தான் என்பதை கார்த்திகேயனே ஒப்புக்கொண்டுள்ளார்.

  விசாரணை தீவிரம்

  விசாரணை தீவிரம்

  இவருடன் சேர்ந்து மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். எதற்காக கொலை நடந்தது, பின்னணி காரணங்கள் என்ன என்பனவற்றை எல்லாம் விசாரித்த பிறகே போலீசார் முறையாக அறிவிப்பார்கள் என்றாலும், கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நடத்தப்பட்டதாக கார்த்திகேயன், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

   பரபரப்பு

  பரபரப்பு

  முன்விரோதம் காரணமாக சீனியம்மாள் ஆட்களை ஏவி இந்த கொலையை செய்திருக்கலாம் என்று 2 நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால் இதை சீனியம்மாள் மறுத்த நிலையில், தற்போது அவரது மகனே கொலைகளை செய்துள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தன் அம்மாவின் அரசியல் வாழ்க்கையே நாசமாக, உமா மகேஸ்வரிதான் காரணம் என்று உணர்ந்த கார்த்திகேயன் இந்த கொலைகளை நடத்தி உள்ளதும் அம்பலமாகி உள்ளது. இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் மிகபெரிய அதிர்வலையையும், சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

  விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
  இன்றே பதிவு செய்யுங்கள்
  - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  It is said that, A Psycho Accused was arrested in Nellai Ex Mayor Uma Maheswari Murder case
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more