ஷாக்! 11ஆம் வகுப்பு மாணவிக்கு திடீர் பிரசவம்.. காரணமான “மைக்செட் மணிமாறன்”.. கொத்தாக அள்ளிய போலீஸ்.!
நெல்லை : நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த நிலையில், மாணவியை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சவுண்ட் சர்வீஸ் வேலை செய்வதற்காக பணகுடியை சேர்ந்த இசக்கியப்பன் என்ற மஸ்தான் என்பவர் வந்துள்ளார்.

நெல்லையில் அதிர்ச்சி
அந்த கிராமத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சவுண்ட் சர்வீஸ் பணியை கவனித்து வந்துள்ளார். அப்போது அந்த மாணவிக்கும் இசக்கியப்பனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பின் காரணமாக அந்த மாணவி இசக்கியப்பன்க்கு பணம் மற்றும் தங்க நகைகள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளடைவில் மாணவிக்கும் இசக்கியப்பனுக்கும் இடையே நெருக்கம் அதிகமானதாகவும் அவர்கள் தனிமையில் சந்தித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மாணவிக்கு வயிறு வலி
இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு அந்த மாணவிக்கு வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாணவியின் வயிற்றில் நீர்க்குமிழிகள் இருப்பதாகவும் வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை எனவும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் பிரசவம்
இந்த நிலையில் நேற்று மாணவிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்படவே நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். அங்கு சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாணவி பிரசவம் அடைந்திருப்பது தெரியவந்து. பின்பு சிறிது நேரத்தில் மாணவிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் நான்குநேரி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நான்குநேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அதிரடி கைது
அதில் பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவருடன் ஏற்பட்ட நட்பினால் தான் இதுபோன்ற நடந்ததாக மாணவி கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று தனிப்பிரிவு போலீசார் பணகுடியில் வைத்து இசக்கியப்பனை கைது செய்து நாங்குநேரி அழைத்துச் சென்றனர். தற்போது அவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications