அம்பாசமுத்திரத்தில் மாவீரர் நாள்.. வீடு வீடாக இறங்கும் சீமான்! இடைத்தேர்தல் களத்தில் அதிரடி வியூகம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இத்தொகுதி காலியானது.

சமீபத்தில் நடந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக பெற்ற தொடர் வெற்றியை அடுத்து, அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தனது பிரச்சாரக் களத்தை மிக பிரம்மாண்டமாகத் தொடங்கும் வகையில், ஈழத்தமிழர்களின் உணர்வுப்பூர்வமான நிகழ்வான 'மாவீரர் நாளை' அம்பாசமுத்திரத்திலேயே நடத்த சீமான் அதிரடி முடிவெடுத்துள்ளார்.

seeman naam tamilar TN By Polls 2026

வரலாற்றுப் பின்னணியும் மாவீரர் நாளும்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளாகவும், மறுநாள் நவம்பர் 27-ஆம் தேதி விடுதலைப் போரில் தாயக மண்ணிற்காக உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக 'மாவீரர் நாளாகவும்' உலகத் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2009-ல் ஈழத்தில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் இந்த நாளை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

வழக்கமாக மாவீரர் நாள் நினைவேந்தல் பொதுக்கூட்டங்களை மிக விமரிசையாக நடத்தி வரும் சீமான், இந்த ஆண்டு நவம்பர் 27 அன்று அந்த மாபெரும் நினைவேந்தல் நிகழ்வை அம்பாசமுத்திரத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளார். இந்நிகழ்வை மிக எழுச்சியுடன் நடத்தி முடிக்கும் வகையில், தமிழ்த்தேசியக் களத்தில் தன்னோடு ஒத்தக் கருத்துடைய பல்வேறு முக்கியத் தலைவர்களையும் ஆளுமைகளையும் இந்த மேடைக்கு அழைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தேர்தல் தேதிக்கு முன்பே தொடங்கும் வீட்டுப் பிரச்சாரம்

இந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் முடிந்த மறுநாளே, தேர்தல் களப் பணிகளை உடனே தொடங்க சீமான் முடிவு செய்துள்ளார்.

தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும் வரை காத்திருக்காமல், நவம்பர் 28 முதலே அம்பாசமுத்திரம் தொகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

தொகுதி மக்களிடம் நேரில் சென்று தனக்கு ஆதரவு தரும்படி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இத்தொகுதியில் உள்ள சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கும் தனது கட்சித் தொண்டர்களுடன் சென்று, "ஒரு வீட்டில் ஒரு வாக்கு" என்ற எளிய இலக்கை முன்வைத்து தீவிர களப்பணியில் ஈடுபடவுள்ளார்.

களத்தில் ஏற்படும் அரசியல் தாக்கம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததன் மூலம் தவெக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால், அம்பாசமுத்திரத்தில் பலம் வாய்ந்த ஆளுங்கட்சி வேட்பாளரை எதிர்கொள்ளும் வகையில், சீமான் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே களத்திற்கு வந்து முகாமிடுவது தொகுதி வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாக்காளர்கள் கருதுகின்றனர்.

ஆளுங்கட்சியான தவெகவின் அசுர பலத்தை உடைக்க எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை ஆதரிக்குமா என்ற விவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தாலும், அதைப்பற்றி எதையும் யோசிக்காமல் சீமான் தனது சொந்த பலத்தில் களமிறங்க முடிவு செய்துள்ளார். மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி, அங்கிருந்தே வீடு வீடாகப் பிரச்சாரத்தைத் தொடங்கும் சீமானின் இந்த அதிரடி நடவடிக்கை, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலைத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் மோதலாக மாற்றியுள்ளது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+