தின்பண்டங்கள் கிடையாதுனு பட்டியலின மாணவர்களை விரட்டிய தென்காசி பெட்டிக்காரர் கைது.. கடைக்கும் சீல்
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் பட்டியலின மாணவர்களிடம் தீண்டாமை காட்டிய பெட்டிக் கடைக்காரர் மகேஸ்வரனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அது போல் ஒரு பிரிவை சேர்ந்தவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள ஒரு கடையில் அவர்கள் தினமும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். அது போல் நேற்றைய தினம் தேன் மிட்டாய், குருவி ரொட்டி உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.

விரட்டும் பெட்டிக் கடைக்காரர்
அப்போது அந்த கடைக்காரர், சிறிதும் மனசாட்சியின்றி, "இந்த உள்ளூர் கடையில் தின்பண்டங்கள் யாரும் வாங்கக் கூடாது, நீங்கள் ஸ்கூலுக்கு போங்க, சரியா, உங்க வீட்லயும் எல்லாரிடமும் சொல்லுங்கள், தின்பண்டங்கள் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு! என்கிறார்.

என்ன கட்டுப்பாடு
அதையும் மீறி அந்த குழந்தைகள் அங்கேயே நிற்கிறார்கள். அதற்கு அந்த கடைக்காரர், கொடுக்க மாட்டோம்டா, இந்த ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு என்கிறார். அதற்கு அந்த குழந்தைகள் கட்டுப்பாடா அப்படின்னா என கேட்கிறார்கள். அதற்கு அவர் , ஆமாம் ஊரில் கூட்டம் போட்டு உங்களுக்கு தின்பண்டங்கள் கொடுக்கக் கூடாது என பேசியுள்ளார்கள் , சரியா போங்க என்கிறார். அந்த குழந்தைகளும் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.

குழந்தைகள் வீடு
அந்த குழந்தைகள் வீட்டில் சொல்லி அவர்களின் பெற்றோர் வந்து கேட்ட பிறகும் அந்த கடைக்கார் நெருப்பை உமிழ்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்காசி எஸ் பி கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் போலீஸாார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டியலினத்தவர்களுக்கு கட்டுப்பாடு
பட்டியலினத்தவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததாக ஒரு பிரிவை சேர்ந்த ராமசந்திரமூர்த்தி என்பவரிடம் போலீஸாார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மாணவர்களை அவமானப்படுத்தவிட்டு தலைமறைவாக உள்ள பெட்டிக் கடை உரிமையாளர் மகேஸ்வரனை போலீஸார் கைது செய்தனர். அவருடைய பெட்டிக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. கடைக்காரர் விரட்டுவதும் குழந்தைகள் கவலை தோய்ந்த முகத்துடன் செல்வதும் பார்ப்போரை கலங்கடிக்கச் செய்துவிட்டது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications