இதென்ன தியேட்டரா? மாமன்ற கூட்டத்தில் விசிலடித்த தவெக கவுன்சிலர்.. தண்ணீர் பட்டிலை பறக்கவிட்ட திமுக!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் விசில் அடித்து எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சைக்கு 2 மாதங்கள் சஸ்பெண்ட் விதித்து மேயர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அல்லா பிச்சை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திமுகவில் இருந்து தவெகவுக்கு தாவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையும் பங்கேற்றார்.

காலையில் தொடங்கிய கூட்டத்திற்கு வந்த அவர், திடீரென விசில் அடித்தபடி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாமன்ற கூட்டத்தை கட்சிக் கூட்டம் போன்று நடத்தக் கூடாது என்றும், மன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tirunelveli TVK Councillor Corporation Meeting

நெல்லை மாநகராட்சி

இதனால் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தவெக. உறுப்பினர் வைத்திருந்த விசிலை திமுக உறுப்பினர்கள் பிடுங்க முயன்றதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீண்டும் மீண்டும் விசில் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

விசிலடித்த கவுன்சிலர்

தொடர்ந்து, தவெ. மாமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மேயரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், மாமன்ற கூட்டத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து, மாமன்ற கூட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார்.

தண்ணீர் பாட்டில் வீச்சு

தவெக கட்சியின் சால்வையை அணிந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், கட்சியின் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் விசில் அடித்து கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் எச்சரித்தார். இதற்கிடையே, விசில் அடித்த த.வெ.க. உறுப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் தண்ணீர் பாட்டிலை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

திமுக கண்டனம்

அவரை கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாமன்ற கூட்டத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி அல்லா பிச்சை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

சஸ்பெண்ட்

இந்த நிலையில், மாமன்ற விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் மாமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதித்து மேயர் உத்தரவிட்டார். அதன்படி, அவர் இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே அரசியல் ரீதியாக மோதல் நீடித்து வரும் நிலையில், மாநகராட்சி மாமன்றத்திலும் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+