ராத்திரி நேரத்தில் ‘அந்த’ சாட்டிங்! ஆன்லைன் ஆப்பால் 1 லட்சம் அபேஸ்! ஏமாற்றத்தில் எஞ்சினியர் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி : அழகிகளுடன் சேட்டிங் செய்வதற்காக ஒரு லட்ச ரூபாயை கட்டி ஏமாந்த ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சார்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சார்ந்த தடி ஜெயசேகர். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பகுதியில் இருக்கும் சிப்காட் வளாகத்தில் பொறியியலாளராக பணிபுரிந்து வருகிறார்,

மேலும், இவரது நண்பருடன் தாழையூத்து அருகே உள்ள பண்டாரக்குளம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது

ஆபாச சாட்டிங்

ஆபாச சாட்டிங்

இந்நிலையில் இவரது செல்போனுக்கு வந்துள்ள லிங்க் ஒன்றை ஓபன் செய்து அவருக்கு பல்வேறு அழகிகளுடன் பேசலாம் எனக் கூறி இவருக்கு மர்ம கும்பல் ஒன்று விலை விரித்துள்ளது இதில் பல்வேறு பெண்களின் புகைப்படம் வெளிவந்திருந்த நிலையில் அவர்களுடன் பேச 2000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அவர்களிடம் நேரடியாக சேட் செய்ய கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு லட்சம் மோசடி

ஒரு லட்சம் மோசடி

இதனை நம்பி பணத்தை கட்டிய ஜெயக்குமார் முதலில் 2000 ரூபாயில் ஆரம்பித்து படிப்படியாக ஒரு லட்சம் ரூபாய் வரை இழந்த நிலையில் இவர்களுடன் யாரும் ஷேர் செய்யவில்லை என கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டது அறிந்துள்ளார் ஜெயக்குமார்.

இளைஞர் தற்கொலை

இளைஞர் தற்கொலை

அதில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு கூப்பிட்டு தனது பணத்தை திரும்ப தருமாறு அழைத்ததாகவும் அதில் எதிர் தரப்பு தகாத வார்த்தைகளில் பேசிய நிலையில் மனம் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இந்த நிலையில் பணிக்குச் சென்று இருந்த ஜெயக்குமாரின் நண்பர் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரதமர் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

ஏற்கனவே ஆன்லைன் சேலைகள் மூலம் மக்கள் பல்வேறு விதமான ஏமாற்றப்பட்டு வந்த சூழ்நிலையில் வித்தியாசமான முறையில் அழகிகளை காட்டி பணத்தை ஏமாற்றியது இங்குள்ள பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+