திருவள்ளூரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ்? தேமுதிகவுக்கு ஷாக்.. பாஜக நிலைமை? தந்தி டிவி சர்வே
திருவள்ளூர்: தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான திருவள்ளூரில் காங்கிரஸ் - தேமுதிக இடையே கடும் போட்டி நிலவும் என்றும், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 22 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் விளவங்கோடு சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னு 3 நாட்களே உள்ளது.

இதனால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு உண்டான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, ஓபிஎஸ், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதனிடையே, லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் (தனி) தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் நல்லத்தம்பி இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதாவது காங்கிரசுக்கு 41 முதல் 47 சதவீத வாக்குகளும், தேமுதிகவிற்கு 33 - 39 சதவீத வாக்குகளும் கிடைக்க இருக்கிறதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் லோக்சபா தொகுதி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்:
காங்கிரஸ்: 41முதல் 47 சதவிகிதம்
தேமுதிக: 33 முதல் 39 சதவிகிதம்
பாஜக: 8 முதல் 14 சதவிகிதம்
நாம் தமிழர் கட்சி: 5 முதல் 8 சதவிகிதம்
மற்றவை: 1 முதல் 4 சதவிகிதம்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் தனித் தொகுதியாக இருந்து வருகிறது. தலித்துகள், வன்னியர்கள், நாடார்கள், முதலியார் கணிசமாக உள்ளனர். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாக்காளர்களாக உள்ளனர். வாக்காளர்கள் எண்ணிக்கையை பார்த்தல், மொத்தமாக - 20,58,098 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் திமுக ஒரு முறை கூட வென்றது இல்லைதான். ஆனால் 2021-ல் திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வென்றது. இது காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு மிகப் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவர் என்பதால் இத்தொகுதியில் சசிகாந்த் செந்தில் வெற்றியை டெல்லி தலைவர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். திமுக ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகள் அதிமுக கூட்டணி வேட்பாளர் நல்லதம்பிக்கு கிடைக்கலாம். மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்குகள் பாஜகவின் பொன் பால கணபதிக்கு செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications