ஸ்டாலின்தான் வராரு.. தலைவா உயிரை தரவா - பாட்டுப்பாடி நெகிழ வைத்த சிறுவன்
ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாரு என்றும் தலைவா உயிரைத்தரவா என்றும் பாட்டுப்பாடி முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்துள்ளனர்.
திருவள்ளூர்: திருமுல்லைவாயில் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது முதலமைச்சர் முன்னிலையில் சிறுவனும் பெண் ஒருவரும் பாட்டு பாடி நெகிழவைத்தனர்.
எளிமையான விளிம்பு நிலை மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று அவர்களுடன் பேசுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். கடந்த சில மாதங்களுக்கு நரிக்குறவர் இன பெண் அஸ்வினியின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உங்களுக்கு என்ன தேவையோ நீங்கள் வரவேண்டாம் நான் உங்களைத் தேடி வருவேன் என்று சொன்னார்.
இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்
இந்த நிகழ்ச்சியின் போது நரிக்குறவர்களுக்கு ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும், திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.

சிறுவனின் பாடல்
அழகாய் உடை உடுத்தி தலையில் தலைப்பா கட்டியிருந்த சிறுவன் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து ஒரு பெண்ணும் தலைவா உயிரைத் தரவா என்று பாடி முதல்வர் ஸ்டாலினை கவர்ந்தார். இருவரும் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

திமுகவின் பிரச்சார பாடல்
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுகவினர் பயன்படுத்திய பிரச்சார விழிப்புணர்வு பாடல் எழுச்சியை ஏற்படுத்தியது. ஸ்டாலின்தான் வராரு... விடியல் தரப்போராரு என்ற பாடல் திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக அரியணையில் ஏறியது. முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஸ்டாலின்.
Recommended Video

நெகிழ வைத்த சிறுவன்
இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இன குடியிருப்புக்கு சென்ற போது ஒரு சிறுவன் தங்களின் வீட்டிற்கு வந்த முதல்வரைப் பார்த்து... ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போராரு என்று உற்சாகமாகப் பாடினான். விளிம்பு நிலை மக்கள் தங்களுக்கு நிஜமான விடியல் வந்து விட்டதாக பேசியது முதல்வர் மு.க. ஸ்டாலின் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே உற்சாகத்துடனேயே மேடையில் பேசும் போதும் வெளிப்படுத்தினார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications