கீழச்சேரி பள்ளி மாணவி மரண வழக்கு..பள்ளி, விடுதியில் சிபிசிஐடி அதிகாரி திரிபுரசுந்தரி விசாரணை
திருவள்ளூர் : திருவள்ளுர் அருகே கிழச்சேரி பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் அதிகாரிகள் பள்ளி, விடுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி தெக்கலூர் காலனியை சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளிக்கு சொந்தமான தனியார் விடுதியில் மாணவி தங்கி படித்து வந்தார்.

இன்று காலையில் விடுதியில் மாணவியின் உடல் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மாணவியின் மரணம் தொடர்பாக உண்மை தன்மை வேண்டும் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெக்கலூர் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக மாநில நெடுஞ்சாலையில் புறப்பட்டனர்.
இவர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆகியோர்கள் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், பள்ளி மாணவர்களின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஐஜி சத்யபிரியா தகவல் தெரிவித்துள்ளார். +2 மாணவியின் உடல் தூக்கிலிட்ட நிலையில் தான் கண்டெடுக்கப்பட்டது. மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி சிறிது நேரத்தில் விசாரிக்க உள்ளது என அவர் கூறியுள்ளார்.
Recommended Video
கீழச்சேரியில் பள்ளி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியாக திரிபுரசுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் அதிகாரிகள் பள்ளி, விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications