தமிழத்தையே உலுக்கிய ஷாக் சம்பவம்! ஆத்திரத்தில் வீட்டிலிருந்த 5 பேர் கொலை!தற்கொலை செய்து கொண்ட கணவன்
திருவண்ணாமலை : குடும்ப தகராறில் மனைவி மற்றும் 4 மகள் மற்றும் 1 மகனை வெட்டி கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அருகே ஓரந்தவாடி அடுத்த மோட்டூர் கிராமத்தில் மனைவி மற்றும் நான்கு மகள்களை வெட்டி படுகொலை செய்து விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனைவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தான் தற்போது திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அடுத்த ஓரந்தவாடி மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு சௌந்தர்யா, திரிஷா, மோனிஷா, தனுஸ்ரி, பூமிகா ஆகிய 4 மகள்கள் மற்றும் சிவசக்தி என்ற மகன் உள்ளார். இவர்களது பெரிய மகள் சௌந்தர்யா திருமணம் ஆகி அவரது கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். பழனி தனது மனைவி நான்கு மகள் மற்றும் மகனுடன் மோட்டூர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.

கொடூர கொலை
இந்நிலையில் பழனிக்கு கடன் இருந்து வந்ததாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அடிக்கடி குடும்பத்துடன் தகராறு செய்து வரும் நிலையில் நேற்று இரவு மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த பழனி மனைவி வள்ளி, திரிஷா, மோனிஷா, தனுஸ்ரி, மற்றும் பூமிகா ஆகிய நான்கு பெண்கள் மற்றும் மகன் சிவசக்தியை வெட்டியுள்ளார். இதில் பூமிகா மட்டும் ரத்த வெள்ளத்துடன் விடிய விடிய உயிருக்கு போராடியிருக்கிறார்.

தூக்கிட்டு தற்கொலை
இதையடுத்து ஆத்திரத்தில் தான் செய்த கொலையால் அச்சமடைந்த பழனியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலையில் வீட்டிலிருந்து யாருமே வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்போர் அங்கு சென்று பார்த்து இருக்கின்றனர். அப்போது பழனியின் மனைவி மகள்கள் திரிஷா மோனிஷா மகாலட்சுமி மகன் சிவசக்தி ஆகிய ஐந்து பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதும் பூமிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்து கிடப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து தகவலறிந்து காவல்துறையினர் அங்கு வந்து ஆறு பேரது சடலங்களை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

வேறு எதுவும் காரணமா?
தற்போது பூமிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் குடித்துவிட்டு தகராறு செய்து வந்த பழனி தனது குடும்பத்தினரை வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகின்றனர். அதே நேரத்தில் அதுதான் காரணமா? இல்லை வேறு எதுவும் பிரச்சினை இருக்கிறதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications