தம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. காதல்.. மோதல்.. மலையிலிருந்து குதித்து.. படுகாயம்
மலை உச்சியில் இருந்து காதலர்கள் கீழே விழும் காட்சி வைரலாகி வருகிறது
Recommended Video
திருவண்ணாமலை: புன்னகை மன்னன் படத்தில் கமலும், ரேகாவும் மலை உச்சியில் இருந்து குதிக்கும் லாங் ஷாட் போல இருக்கிறது இந்த வீடியோ காட்சியும்.. காதலர்கள் 2 பேரும் தற்கொலை செய்ய மலை உச்சியில் இருந்து கீழே குதித்து.. இப்போது ஆஸ்பத்திரியில் கட்டு போட்டு படுத்துள்ளனர்.
அருண்குமார் - நீலாம்பரி.. இவர்கள்தான் அந்த காதல் ஜோடி.. செங்கத்தை அடுத்த சந்தபுதுப்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார், சோமாசிபாடியில் உள்ள தனியார் காலேஜில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு படித்து வருகிறார். அருண்குமாருக்கு வயசு 19, இவரது காதலிக்கு வயசு 16!
அந்த பெண் ஆம்பூரை சேர்ந்தவர். ஏதோ ஒரு கல்யாணத்தில் 2 பேரும் பார்த்திருக்கிறார்கள்.. மண்டபத்திலேயே காதல் வந்துவிட்டது. ஆளாளுக்கு செல்போனை நம்பரை வாங்கி கொண்டு பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்! வீட்டில் விஷயம் தெரிந்து ரெண்டு தரப்பிலும் கொதித்து போய்விட்டனர்.

தற்கொலை
இதனால் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். பெண்ணுக்கு 16 வயசுதானே ஆகிறது.. இப்ப கல்யாணம் பண்ண கூடாது என்று நண்பர்கள் அருண்குமாருக்கு அட்வைஸ் தந்தனர். இதனால் இந்த ஜோடி வெறுப்பாகி விட்டது. பேசாமல், தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, போளூருக்கு வந்திருக்கிறார்கள்.

மலை உச்சி
சுயம்பு லட்சுமி நரசிம்மசுவாமி மலை மீது இருவரும் ஏறினர். அது 900 படிக்கட்டுக்களை உடையது. மலைமேலேயே இருவரும் இரவு தங்கிவிட்டனர். திரும்பவும் காலையில் இறங்கி வந்து ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மலை மீது ஏறினர். இவர்களின் நடமாட்டத்தை கண்ட அந்த பகுதி மக்கள், போளூர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசார், பாறைகள் வழியாகவும், மலை மீது ஏறியும் காதல் ஜோடியை தேட ஆரம்பித்தனர்.

படுகாயம்
இதனை கண்ட அந்த ஜோடி, 300 அடி உயர மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள கீழே குதித்தனர். ஆனால், கீழே உள்ள பாறையில் இருவருமே விழுந்துவிட்டதால் படுகாயம் அடைந்தனர். அவர்களை கண்ட மக்களும், போலீசாரும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக மீட்டுபோளூர் ஆஸ்பத்திரியிலும், பின்னர் திருவண்ணாலை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.

வீடியோ
இப்போது ஜோடிக்கு சிகிச்சை நடந்து வருகிறது. இந்த காதலர்கள் மலை மீதிருந்து குதிக்கும் காட்சியை அங்கிருந்தோர் செல்போனிலும் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோதான் படுவைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications