"லுங்கியுடனே".. பிரபல நடிகர் லாரன்ஸ்ஸின் படம்.. அதுக்குன்னு இப்படியா.. திகைக்க வைத்த திருவண்ணாமலை
திருவண்ணாமலை: பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் படம் பார்க்க சென்ற 11 பேருக்கு, திருவண்ணாமலை தியேட்டரில் காத்திருந்தது அதிர்ச்சி.. இதையடுத்து அவர்கள் யாருமே படம் பார்க்காமல் திரும்பி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தேனியில் ஒரு சம்பவம் நடந்தது.. தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் பால அய்யனார்.. இவர் தன்னுடைய குடும்பத்தினர் 11 பேருடன் அங்குள்ள வெற்றி திரையரங்கில் டாடா என்ற திரைப்படத்தை பார்க்க சென்றிருக்கிறார்.

அங்கு பால அய்யனாரின் அப்பா, தன்னுடைய குடும்பத்தினர் 11 பேருக்குமாக சேர்த்து, 1200 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்திருக்கிறார்..
பால அய்யனார்: டிக்கெட் எடுக்கும்போது லுங்கியுடனேயே சென்றிருக்கிறார்.. ஆனால், அங்கிருந்த தியேட்டர் ஊழியர்கள், அய்யனாரை மட்டும் உள்ளே அனுப்ப மறுத்தனர்.. முறைப்படி பணம் செலுத்தி டிக்கெட் வாங்கியிருக்கிறோம், பிளாக்கில் வாங்கிய டிக்கெட் கூட கிடையாது.. எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.. அந்த தியேட்டரில் லுங்கி அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாதாம்... இதுக்காகவே ரூல்ஸ் போட்டு வைத்திருக்கிறார்கள் அந்த தியேட்டர்..
அந்த ரூலை அவர்கள் பின்பற்றியும் வருகிறார்கள். மேலும் தியேட்டர் முன்பகுதியில், நோட்டீஸ் போர்டும் வைத்திருக்கிறார்களாம். ஆனால், அதை கவனிக்காமல் அய்யனார் டிக்கெட் எடுத்துவிட்டதாக தியேட்டர் தரப்பில் சொன்னார்கள்.. அதற்கு, அப்பா டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் எடுக்கும் போதும், பணம் கட்டும்போதும் லுங்கி தானே அணிந்திருந்தார்? அப்பவே சொல்லி இருக்க வேண்டியதுதானே? இப்போ உள்ளே வந்த பிறகு சொன்னால் என்ன அர்த்தம்? என்று கோபத்துடன் கேட்டனர்..
பிறகு, டிக்கெட்டுக்கு செலுத்திய பணத்தை திருப்பி தர கேட்டிருக்கிறார்கள்.. ஆனால், அதற்கும் தியேட்டர் நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாம்.. லுங்கி கட்டியவருக்கு மட்டுமே பணத்தை ரீஃபண்ட் செய்ய முடியும் என்றும், மற்றவர்கள் டிக்கெட்டில் படம் பார்க்க செல்லலாம் என்றும் சொல்லி உள்ளார்கள்.. இதனால் குடும்பத்தினர் மேலும் கொதித்து போனார்கள்..

மொத்த டிக்கெட்டுகளையும் தியேட்டரிலேயே வைத்து கிழித்தெறிந்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்கள். "சினிமாவுக்குதானே போகிறோம், அதுவும் தன்னுடைய குடும்பத்தினருடன்தானே படம் பார்க்க போகிறோம் என்று நினைத்து, அவர் லுங்கி அணிந்து போயுள்ளார். அதுமட்டுமல்ல 45 வருடங்களாகவே அய்யனார் லுங்கிதான் அணிவதுதான் வழக்கமாம்..
தமிழ்நாட்டில் லுங்கி: தமிழ்நாட்டில் லுங்கி கட்டிய தமிழனுக்கு மரியாதை இல்லையா? லுங்கிக்கு இங்கு அனுமதி இல்லை என்றால், லுங்கி கட்டுபவர்கள் எல்லாம் கெட்டவர்கள், மோசமானவர்கள் என்று சித்தரிக்க பார்க்கிறார்களா? லுங்கிக்குத் தான் மரியாதை இல்லை, கட்டிய பணத்தையும் திருப்பி தரவில்லை.. லுங்கி கட்டியவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்கப் பார்க்கிறார்களா? என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள் அய்யனார் குடும்பத்தினர்.
இதேபோல ஒரு சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் நடந்துள்ளது.. அங்குள்ள எம்கேஜி என்ற தியேட்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படம் திரையிடப்பட்டுள்ளது.. இந்த படத்தை பார்ப்பதற்காக, திருவண்ணாமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கலம் கிராமத்திற்கு 11 இளைஞர்கள் வந்துள்ளனர்..
ஆனால், லுங்கி கட்டிக்கொண்டு தியேட்டருக்குள் செல்ல அனுமதி இல்லை என்று அந்த தியேட்டர் மேனேஜர் சொல்லி உள்ளார்.. இதனால் அதிர்ந்து போன இளைஞர்கள், அப்படியானால், இதை எழுத்துப்பூர்வமாக எழுதி தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.. மேனேஜரும் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்துள்ளார். இதில் சமாதானம் அடையாத இளைஞர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தியேட்டர் மேனேஜர் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்...
அரைகுறை டிரஸ்: விரைந்து வந்த போலீசார், இளைஞர்களை தியேட்டரில் இருந்து வெளியேற்றினர்... இதனால் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சினிமா பார்க்க வந்த இளைஞர்கள் 11 பேரும் படம் பார்க்காமலேயே திரும்பி சென்றனர்.. சமீபகாலமாகவே லுங்கி அணிந்து செல்வதால் தியேட்டருக்குள் அனுமதி மறுப்பது அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.. அரைகுறை டிரஸ்ஸில் சினிமாவில் பெண்களை ஆடவிடுகிறார்கள்.. வருடமெல்லாம் உழைத்து களைத்து கிடக்கும் ஒரு சாமானிய மனிதன் முழு ஆடையான லுங்கி அணிந்து தியேட்டருக்குள் நுழையக்கூடாதா? என்ற கேள்விகள் வலம்வர துவங்கி உள்ளன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications