Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலை தீபம் காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு.. கிரிவலம் வந்த டிஜிபி சைலேந்திரபாபு

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக கிரிவலப்பாதையில் ஓடினார்.

திருவண்ணாமலை ஸ்தலத்தில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியதாகவும் மற்றும் மகா சிவராத்திரி தொடங்கியதாகவும் புராணங்களில் குறிப்படப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள். பிறவிப்பிணி நீங்க திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் மட்டுமே முடியும் என்பது முன்னோர் வாக்கு.

பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.அண்ணாமலையை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும், சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் லட்சக்கணக்கான பக்தர்கள் மாதந்தோறும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர்.

பக்தர்கள் வருகை

பக்தர்கள் வருகை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்துகொள்ள திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து சார்பில் 2 ஆயிரத்து 692 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலை நகரில் 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், 52 இடங்களில் கார் பார்க்கிங் செய்ய வாகன நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை மற்றும் ஊராட்சி சார்பில் குடிதண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், 17 இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மலை ஏறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

மலை ஏறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

மகா தீபத்தன்று, அண்ணாமலையார் கோயில் மலை மீது ஏற பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது. 2500 பக்தர்கள் மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்து செல்ல கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

என்னென்ன ஏற்பாடுகள்

என்னென்ன ஏற்பாடுகள்

அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மகாதீப விழாவை தரிசிக்க, இன்று மதியம் 2 மணியில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தீபத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று முதல் வரும் 8ம் தேதி வரை 63 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நகரையொட்டி, 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கார், வேன் போன்றவை நிறுத்த 59 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிஜிபி சைலேந்திரபாபு கிரிவலம்

டிஜிபி சைலேந்திரபாபு கிரிவலம்

கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலையில் 2 நாட்கள் ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக கிரிவலப்பாதையில் ஓடினார். சாதாரணமாக பக்தர்கள் நடந்து சென்றால் கிரிவலப்பாதையை சுற்றிமுடிக்க குறைந்தது 3 மணிநேரம் ஆகும். ஆனால் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒரு மணி நேரம் 52 நிமிடத்தில் ஓடி முடித்து உள்ளார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அதில் காவல்துறையில் இன்னும் வேகமாக ஓடுபவர்கள் உள்ளனர் என்றும் பதிவிட்டு இருந்தார்.

 கார்த்திகை பவுர்ணமி கிரிவலம்

கார்த்திகை பவுர்ணமி கிரிவலம்

மகா தீபம் காண வந்திருக்கும் பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் வரத் தொடங்கியுள்ளனர். திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை 7ம் தேதி காலை 8.14 மணிக்கு தொடங்கி, நாளை மறுதினம் 8ஆம் தேதி காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, மகாதீபத்திருவிழா முடிந்த பிறகும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நாளையும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை மலை மீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும் என்பதால் 11 நாட்களும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+