ஒன்றாகச் சேர்ந்த வைத்திலிங்கம், காமராஜ்? - ’மாஜி.’ குடும்ப திருமண விழாவில் தொண்டர்களிடையே சலசலப்பு!
திருவாரூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உறவினரின் திருமண விழா அழைப்பிதழ் மற்றும் பேனர்களில், ஓபிஎஸ், ஈபிஎஸ், வைத்திலிங்கம் படங்கள் இடம்பெற்றிருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் இரு அணிகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
முன்னாள் அமைச்சர் காமராஜ், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருக்கிறார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கிறார்.
இந்நிலையில், காமராஜின் நெருங்கிய உறவினர் இல்லத் திருமண அழைப்பிதழில் ஓபிஎஸ், ஈபிஎஸ் படங்கள் இணைந்தும், காமராஜ், வைத்திலிங்கம் படங்கள் இணைந்தும் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மோதல்
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெடித்த அதிமுக மோதல், இன்றளவும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டி இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ்ஸை தேர்வு செய்த நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் வந்தனர். சமீபத்தில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாததாகியுள்ளது.

இரு தரப்பாக பிரிந்து
எனினும், ஈபிஎஸ் தரப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், இரு தரப்பினருக்கு இடையேயான பிளவு நீடிக்கிறது. தஞ்சை மண்டலத்தைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓபிஎஸ்ஸின் வலது கரமாகவே செயல்பட்டு வருகிறார். முன்னாள் அமைச்சர் காமராஜ், எடப்பாடி ஆதரவாளராகச் செயல்படுகிறார். இருவருக்கும் இடையே தஞ்சை மண்டலத்தில் பெரும் அதிகாரப் போரே நடந்து வருகிறது.

ஒன்றாக வைத்திலிங்கம், காமராஜ்
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் அக்கா பேரனின் திருமணம் நடைபெற்றது. இதில் திருமண வாழ்த்து தெரிவிப்பதற்காக ப்ளக்ஸ் பேனர்கள், அச்சிடப்பட்ட போஸ்டர்களில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் படமும், ஈபிஎஸ்அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோரின் படமும் ஒன்றாக இடம்பெற்றுள்ளன.

இணைந்த கரங்கள்
மேலும் திருமண அழைப்பிதழிலும் ஓ.பி.ஸ், ஈ.பி.எஸ் ஆகியோரின் படங்கள் ஒன்றாக இடம்பெற்றுள்ளன. திருமண அழைப்பிதழ் அதிமுக மோதலுக்கு முன்பே அச்சிடப்பட்டதாக கூறப்பட்டாலும், திருமணத்திற்கு வந்தவர்கள் பேனர்கள், போஸ்டர்களை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், காமராஜ் குடும்ப திருமண விழாவில், ஓ.பி.ஸ். ஈ.பி.எஸ், வைத்திலிங்கம் படங்கள் இடம்பெற்றது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications