அண்ணாமலையுடன் வந்த பாஜகவினர்.. திட்டமிட்டு வன்முறை.. கி.வீரமணி குற்றச்சாட்டு!
திருவாரூர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டுவதாக திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையம் வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அரசு சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.

செருப்பு வீச்சு
அப்போது அஞ்சலி செலுத்துவதில் திமுக - பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டபோது, பாஜகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவரால் செருப்பு வீசப்பட்டது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கி.வீரமணி
இந்த மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், ராணுவ வீரர் லட்சுமணன் நாட்டை காக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்துள்ளார். அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சென்றிருந்தார். அப்போது மரபின்படி அமைச்சர் என்ற முறையில் அரசு சார்பில் முதலாவதாக மரியாதை செலுத்த வேண்டும்.

அண்ணாமலை மீது குற்றச்சாட்டு
ஆனால் அதற்கு மாறாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் மரியாதை செலுத்திய பிறகு அமைச்சர் மரியாதை செய்யட்டும் என கூறி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். அதன் பின்னர் போலீசார் மரபு மாறாமல் அமைச்சருக்கு முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்ய வைத்தனர்.

பாஜகவின் திட்டமிட்ட வன்முறை
அப்போது அண்ணாமலையுடன் வந்த பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பாஜகவினர் வன்முறையை தூண்டுகின்றனர்.

டெல்லியில் பெரியார்
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கருப்பு சட்டை போராட்டம் குறித்து பெசிய அவர், எல்லா அரசியல் கட்சிகளும் எந்தவொரு போராட்டத்தை முன்னெடுத்தாலும் போராட்டத்தை கூர்மை படுத்த வேண்டும் என்று சொன்னால் அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற சட்டை, கருப்பு சட்டை. பெரியார் மறைந்தாலும் உணர்வால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்தை தாண்டி டெல்லியிலும் தற்போது நுழைந்து விட்டார் என்று தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications