”பார்க்கதான போறீங்க” முன்னாள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையா? சசிகலா சொன்ன ஒற்றை பதில்!
திருவாரூர்: அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பொதுமக்களும், கழக உடன் பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாய்பாபா கோயில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குவிந்தனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் பக்தர்கள் மீது தூவப்பட்டன. இந்த கும்பாபிஷேகத்தை காண சசிகலா மற்றும் சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். சசிகலா கும்பாபிஷேகத்துக்கு வந்தபோது ஏராளமான பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சசிகலா பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சசிகலா கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பொதுமக்களும், கழக உடன் பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஓபிஎஸ் மட்டுமல்ல எல்லோரும் சந்திக்க வந்தாலும் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

பொறுத்திருந்து பாருங்கள்
தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதா என்ற கேள்விக்கு, கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தனிச்சையாக செயல்படுவது குறித்தும், யாரையும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று கூறியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

பதிலால் எழும் சந்தேகம்
அதற்கு ஒற்றைத் வார்த்தையில், சரி நீங்கள் பார்க்க தான போறீங்க என்று பதில் அளித்தார். இத்தனை நாட்களாக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறி வந்த சசிகலா, முதல்முறையாக எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் வந்தால் சந்திப்பேன் என்று கூறியுள்ளதால், விரைவில் ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு?
கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கியுள்ள நிலையில், அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் தொண்டர்களை கூட்டி பலத்தை நிரூபிக்க ஓ.பன்னீர் செல்வம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் வரும் செப்.15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications