விளையாட விடு.. என்னை விளையாட விட்டு பாரு.. அதைவிட்டுட்டு என் சின்னத்தை மறைக்கிறே?.. சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சி சின்னம் மங்கலாக உள்ளது என்று சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருவாரூர்: "நல்ல ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பிறந்திருந்தா நின்னு விளையாட விடணும்டா.. என்னை விளையாட விட்டு பாரு.. அதைவிட்டுட்டு என் சின்னத்தை மறைக்கிறே?" என்று சீமான் கரும்பு விவசாயி சின்னம் குறித்து ஆவேசமாக கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் சின்னம் எந்திரங்களில் சரியாக தெரிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சி சார்பில் ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
தங்களுடைய சின்னம் மங்கலாகவே தெரியும்படி வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று சீமான் மனம்வெதும்பி கூறுகிறார். திருவாரூர் பிரச்சாரத்தில் இதை பற்றி பேசும்போது அவர் சொன்னதாவது:

சாதாரண பையன் நான்
ஓட்டு எந்திரத்துல என் சின்னம் தவிர மத்த எல்லாத்தையும் பளிச்சினு வெச்சிருக்கிறே. என்னை பார்த்து நீ எவ்வளவு பயப்படுறே? நான் ஒரு சாதாரண பையன் என்னை பார்த்து எவ்ளோ நடுங்குறே! நீ நல்லவனா இருந்தா என்னை விட்டுட்டு விளையாடு. என்னை விளையாட விட்டுட்டு பாரு. அந்த துணிவு இல்லையா உனக்கு? தேர்தலில் என் சின்னத்தை மறைக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமை.

மெழுகுவர்த்தி
போன தடவை 2 மெழுகுவர்த்தி குடுத்தாங்க.. சுத்தி நுரையை போட்டு, கண்ணுக்கு தெரியாம வெச்சிட்டாங்க! போறவங்க எல்லாம் எங்கப்பா சின்னத்தை காணோம்னு கேட்டாங்க. அங்கதானே இருந்ததுன்னு சொல்ல வேண்டியதா போச்சு.

நின்னு விளையாடு
இந்த தடவை நாங்க கத்தி கத்தி, ஊரெல்லாம் சுத்தி சுத்தி, நெஞ்சு வெடிக்க, தொண்டை வெடிக்க தூக்கம் இல்லாம பேசிட்டு இருக்கோம். நீங்க இப்படியாடா தோற்கடிக்க நினைக்கிறது. நல்ல ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பிறந்திருந்தா நின்னு விளையாட விடணும்டா.

விவசாயி
சுயேச்சையா.. ஒன்னுமே இல்லாதவன் சின்னமெல்லாம் பளிச்னு பளிச்னு போட்டிருக்காங்க. இந்த விவசாயி சின்னத்தை மட்டும் கடைசியா குடுத்தா, எப்படி கொண்டு போய் சேர்ப்பாங்கன்னு நினைச்சாங்க. ஒரே நாளில் உலகம் பூராவும் போய் சின்னம் சேர்ந்துடுச்சு.

பயந்துட்டாங்க
இவன் நம்மள பெரிய பாடுபடுத்துதிடுவான் போல இருக்கேன்னு நினைச்சு பயந்துட்டாங்க. எதை தந்தாலும் கொண்டு போய் சேர்த்துடறானேன்னு யோசித்தாங்க. கடைசியில சின்னத்தை தெரியாம ஆக்கிட்டாங்க.

அங்கு குத்துமா
இப்போ மக்கள் கிட்ட நான் என்ன கெஞ்ச வேண்டியிருக்குன்னா, "அம்மா.. நீ ஓட்டு பெட்டியை போய் பாரு! எந்த சின்னம் தெரியலையோ, அதுதான்ம்மா நம்ம சின்னம்! அந்த பெட்டியில எது ஒன்னுமில்லாம பொத்தலா இருக்கோ.. அதுதான்ம்மா நம்ம சின்னம், அங்க குத்துமா-ன்னு சொல்ல வேண்டியிருக்கு" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications