சிங்கப்பெண்கள் அதிரடிப்படை டம்மியா? திருவாரூரில் கொடுமைக்கார ஆசிரியர்! புகார் கொடுத்தும் பலன் இல்லை!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தும், கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெண் ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பெண்கள் அதிரடிப்படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண் கூறியிருப்பது, அரசு மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா. இவருக்கும் திருவாரூர் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள 'மன்ப உல் உலா' மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் வைகறைவாணன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது.

Thiruvarur

மன்ப உல் உலா ஆசிரியர்

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் வைகறைவாணன் பொதுவாக அமைதியான கேரக்டராகதான் இருந்திருக்கிறார். பள்ளியில் கூட மாணவர்களிடம் அதிர்ந்து பேசாதவராக.. சாப்ட் கேரக்டர் ஆசிரியராகத்தான் இருந்திருக்கிறார். ஆனால், குடும்பத்தில் அப்படி கிடையாது. இவர் வசித்து வரும் வீடு மனைவி கீர்த்தனாவின் முதலீட்டில் கட்டப்படதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்த வீட்டை தன் பெயரில் மாற்ற வேண்டும் என்று வைகறைவாணன் தனது பெற்றோருடன் சேர்ந்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கீர்த்தனா வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

வரதட்சணை கொடுமை

அந்த வீடியோவில் கீர்த்தனா பேசியிருப்பதாவது, "கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அம்மா வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தேன். இப்போதுதான் என் வீட்டிற்கு வந்தேன். வந்த என்னை கணவர் அடித்து துன்புறுத்துகிறார். என் பணத்தில் வாங்கிய வீட்டை, அவர் பேரில் வரதட்சணையாக கேட்டு.. அவரது பெற்றோருடன் சேர்ந்துக்கொண்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார். வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த பின்னர், அவர்கள் வந்து பூட்டிய கேட்டை திருந்துவிட்டனர்.

சிங்கப்பெண்கள் அதிரடிப்படை டம்மியா?

இருப்பினும், இந்த சம்பவம் நடந்த பிறகு.. அன்று மாலை வீட்டிற்கு வந்த கணவர் வைகறைவாணன் என்னையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி.. இன்றுடன் உன் கதையை முடித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில், எஸ்பி அலுவலகத்திற்கும், சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினருக்கும் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது லோக்கல் போலீஸ் விசாரிக்க வேண்டிய புகார் என்று கூறி, சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினர் எனது புகாரை எடுக்க மறுக்கின்றனர். எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அவர்கள் சொல்லிவிட்டனர்.

எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்காகவது நான் உயிருடன் இருக்க வேண்டும். எனவே இந்த விஷயத்தில் காவல்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகத்தான் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. ஆனால், வரதட்சணை கொடுமையால் தனது உயிருக்கே ஆபத்து இருப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்தபோதும், அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அப்படியெனில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை என்பது பெயர் அளவுக்கு மட்டும் செயல்படும் காவல் பிரிவா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+