முகத்துல ஈக்கள் மொய்க்குது, எழுந்திரிங்க.. இறந்த கணவரை எழுப்ப போராடிய மனைவி.. உலுக்கிய திருவாரூர்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூரில் சைக்கிளில் ஒரு முதியவர் சென்று கொண்டிருந்தார்.. அப்போது திடீரென அவர் மீது நகராட்சியின் கழிவுநீர் அகற்றும் வாகனம் மோதிவிட்டது.. இதில், அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.. கணவர் இறந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார் மனைவி.. அவரது உடலைப் பார்த்து கதறியதுடன், மீண்டும் உயிர் வந்துவிடாதா என்ற ஏக்கத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய போராட்டம், அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்து விட்டது..

திருவாரூர் வடம்போக்கி பகுதியை சேர்ந்தவர் சங்கர்ராமன்.. 73 வயதாகிறது.. இவரது மனைவி ஜெயா 65 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு கவிதா என்ற மகள் உள்ளார். சங்கர்ராமன் திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்தில் வேலை பார்த்து வந்தார்.

Tiruvarur Husband Death

திருவாரூர் தம்பதி

நேற்று முன்தினம் அதாவது நவம்பர் 4-ம் தேதி சங்கர்ராமன் சைக்கிளில் தியாகராஜர் கோயிலின் மேற்கு கோபுர வாசல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருவாரூர் நகராட்சியின் கழிவுநீர் அகற்றும் வாகனம், அவரது சைக்கிள் மீது மோதி விட்டது.. இதில் சங்கர்ராமன் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள், சங்கர்ராமனைப பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, கணவர் விபத்தில் சிக்கிய தகவல் ஜெயாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பதறியடித்துக் கொண்டு விபத்து நடந்த இடத்துக்கு ஓடி வந்தார். அங்கு சாலையில் உயிரற்று கிடந்த கணவரைப் பார்த்ததும் கதறி அழுதார்., ஆனால், கணவர் இறந்துவிட்டார் என்பதை அவரது மனம் ஏற்க மறுத்தது.

முகத்தில் மொய்த்த ஈக்கள்

சங்கர்ராமனின் முகத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததை பார்த்ததுமே துடிதுடித்து போன ஜெயா, தனது சேலையால் ஈக்களை விரட்டினார்... பிறகு கணவரை எழுப்ப முயற்சித்தார்.. "ஏங்க, எழுந்திரிங்க... நாம வீட்டுக்குப் போயிடலாம். ஈயெல்லாம் வந்து முகத்துல உட்காருது பாருங்க.. உங்களுக்கு ஒண்ணுமில்ல, எழுந்திரிங்க, வீட்டுக்கு போலாம்" என்று கண்ணீருடன் கதறிக்கொண்டே அழைத்தார்..

பிறகு, கணவரின் கால்களை பிடித்து பாதங்களில் தேய்த்து சூடேற்ற முயன்றார்... எப்படியாவது கணவர் மீண்டும் எழுந்துவிட மாட்டாரா என்ற பரிதவிப்பில் அவரது உடலை சுற்றியே இருந்தார். கணவர் இறந்துவிட்டார் என்பதை உணர முடியாமல், அவரை மீண்டும் உயிருடன் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் தொடர்ந்து போராடிக் கொண்டேயிருந்தார்..

கண்கலங்க வைத்த பாசம்

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஜெயா நடத்திய இந்தபாசப் போராட்டத்தை பார்த்து, பொதுமக்கள் மனம் உருகினர்... கண்கள் கலங்கினர்.. கணவரைப் பிரிந்த துயரத்தில் கதறி அழுதுகொண்டிருந்த ஜெயாவை அவர்களால் தேற்றவும் முடியவில்லை. கணவரை இழந்த அதிர்ச்சியில் அவர் தவித்த காட்சி அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது..

தகவலறிந்து, விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்ற நகர காவல் துறையினர் சங்கர் ராமன் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக திருவாரூர் டவுன் போலீசார், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தி வருகிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+