Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா பரவல்..ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்..தேவஸ்தானம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிவது அவசியம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. விடுமுறை புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு கூறியுள்ளபடி பக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் வரும் ஜனவரி 1 முதல் ஜனவரி 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus: Tirumala Tirupati Devasthanam new restrictions for devotees from 1st January 2023

உலகத்தின் பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவது அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவத்தொடங்கிய போது லாக்டவுன் விதிக்கப்பட்டது. கோவில்கள் மூடப்பட்டன. திருப்பதி கோவில் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு பக்தர்கள் திருப்பதிக்கு வருவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர். அம்பானி போன்றவர்கள் தங்கம் வைரம் என உண்டியலில் செலுத்துகின்றனர். அதே நேரத்தில் ஏழை நடுத்தர மக்கள் தங்களால் இயன்ற பணத்தை காணிக்கை செலுத்துகின்றனர். தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
காணிக்கையாக கிடைத்த தலைமுடியை ஏலம் விடுவதன் மூலம் பல கோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.

Coronavirus: Tirumala Tirupati Devasthanam new restrictions for devotees from 1st January 2023

கொரோனா காலத்தில உண்டியல் வருமானம் ஆண்டுக்கு 1000 கோடியை எட்டவில்லை. இந்த ஆண்டு உண்டியலில் வருமானமாக கடந்த 11 மாதத்தில் 1200 கோடிக்கும் மேல் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 2ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுவதை முன்னிட்டு 10 நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதனை முன்னிட்டு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஜனவரி 1 முதல் 9 இடங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மார்கழி மாதம் என்பதாலும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதாலும் திருப்பதி மலையில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. அதனால் இலவச தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு செல்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது.

கொட்டும் மழை, குளிர் காற்று ஆகியவற்றின் காரணமாக குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோருடன் வரிசையில் மிக நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் தங்களை விரைவாக கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ள பக்தர்கள், விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். விஜிலென்ஸ் துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று பக்தர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Coronavirus: Tirumala Tirupati Devasthanam new restrictions for devotees from 1st January 2023

இந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி திருநாள் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அப்போது கோவில் கருவறை, தங்க கோபுரம், தங்க கொடிமரம், பிரசாத தயாரிப்பு கூடங்கள், பூஜை பாத்திரங்கள், பிரசாத தயாரிப்பு பாத்திரங்கள் ஆகியவை உள்ளிட்ட கோவில் மற்றும் அதில் உள்ள அனைத்து பொருட்களும் கழுவி சுத்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து நாமக்கட்டி, புனுகு, ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட ஆகியவை உள்ளிட்ட வாசனை திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமணக்கலவை கோவில் சுவர்களுக்கு பூசப்பட்டது. தொடர்ந்து கோவில் ஜீயர்கள் புதிய பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.

வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை திருப்பதி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், இணை நிர்வாக அதிகாரி சதா பார்கவி, திருப்பதி எஸ்பி. பரமேஸ்வர் ரெட்டி உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாரெட்டி, வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஓர் இடத்திலும் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். திருப்பதியில் மட்டும் 8 இடங்களில் 92 விநியோக கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் 1ஆம் தேதி மதியம் 2 மணியில் இருந்து சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து நான்கரை லட்சம் டோக்கன்கள் பக்தர்களுக்கு ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும்.

திருமலையில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இலவச டோக்கன்களை பெற்றுக்கொண்ட பக்தர்கள், அதில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு முன்பு திருமலைக்கு வந்தால் போதுமானது. டோக்கன் பெற்றவர்கள், திருமலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணாதங்கும் விடுதி அருகே ஆஜராக வேண்டும். பக்தர்களின் கூட்டத்தால் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 3ஆம் தேதி வரை திருமலையில் அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

ஜனவரி 1 முதல் 11 வரை நேரில்வரும் அரசியல் பிரதிநிதிகளுக்கு மட்டுமே தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும். ஜனவரி மாதம் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி, அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க ரத ஊர்வலம் 4 மாட வீதிகளிலும் நடைபெறும், மறுநாள் 3ஆம் தேதி துவாதசியை முன்னிட்டு, காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் 2 மலைப்பாதைகளும் திறந்தே இருக்கும். கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டியது கட்டாயம். இவ்வாறு சுப்பாரெட்டி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+