திருமலை திருப்பதியில் பம்பர் பிரைஸ்! நாளை முதல் தரிசன டிக்கெட்டை காட்டினால் அன்லிமிடெட் லட்டு!
திருப்பதி: திருப்பதியில் தரிசன டிக்கெட்டுடன் லட்டு கவுன்ட்டருக்கு வந்தால் நாளை முதல் எத்தனை லட்டுகளை வேண்டுமானாலும் அன்லிமிடெட்டாக வாங்கிக் கொண்டு செல்லலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் அறிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்பட்டால் ஒரு லட்டு ரூ 50 கொடுத்து பெறலாம். இதுவும் ஒரு ஆளுக்கு இத்தனை எக்ஸ்ட்ரா லட்டு என கட்டுப்பாடு உள்ளது.

இந்த நிலையில் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாகி சியாமளா ராவ், சாமி கும்பிட்ட தரிசன டிக்கெட்டுடன் லட்டு கவுன்ட்டருக்கு வரும் பக்தர்களுக்கு தலா ரூ 50 விலையில் அன்லிமிட்டெட்டாக எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வழங்கப்படும். இது நாளை முதல் (செப்டம்பர் 2) அமலுக்கு வருகிறது என்றார்.
சிலர் சாமி கும்பிடாமலேயே திருப்பதி மலைக்கு வந்து ஏராளமான லட்டுக்களை வாங்கிச் சென்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். சிலர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் நெருங்கிய உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் லட்டை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருமலை திருப்பதி ஏழுமலையானை காணச் செல்லும் பக்தர்கள் அங்குள்ள லட்டு கவுன்ட்டர்களில் ரூ 10, ரூ 50, ரூ 200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்கிச் செல்வது வழக்கம். பல நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும் வகையில் இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது.
இந்த லட்டை வாங்க ஆதார் அட்டை கட்டாயம் என தேவஸ்தானம் குறிப்பிட்டிருந்தது. அதாவது ஒரு ஆதார் கார்டுக்கு அதிகபட்சமாக 2 லட்டுகளை வாங்கிச் செல்லலாம். சாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்படும்.
ஒரு ஆதார் அட்டைக்கு 1 இலவச லட்டு மற்றும் கூடுதலாக தலா ரூ 50-க்கு 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் நிறைய புரோக்கர்கள் லட்டுகளை வாங்கி வெளியே விற்பனை செய்வது தெரியவந்தது. இதனால்தான் லட்டுக்கு ஆதார் கட்டாயம் என்ற விதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில் தரிசன டிக்கெட்டை காட்டினால் ரூ 50-க்கு அன்லிமிடெட் லட்டு வழங்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications