அம்மாடியோவ்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் ஒரு மாதத்தில் எவ்வளவு வசூலாயிருக்கு பாருங்க!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூன் மாத உண்டியல் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
உலக பணக்கார கடவுள்களில் ஒருவர் திருப்பதி ஏழுமலையான். ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும் காசு பணங்களையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

உண்டியல் வசூல்
இதனால் ஆண்டுதோறும் ஏழுமலையான் கோவிலில் காணிக்கை குவிந்து வருகிறது. உண்டியலில் குவியும் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

100 கோடிக்கு மேல் வசூல்
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் வசூலான உண்டியல் காணிக்கை தற்போது எண்ணப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் மட்டும் உண்டியல் மூலம் 100 கோடியே 37 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.

புதிய சாதனை
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 91 கோடியே 81 லட்சம் ரூபாய் வசூலானது. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 9 கோடி ரூபாய் அதிகரித்து 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.

லட்டு விநியோகம் உயர்வு
இதேபோல் கடந்த ஆண்டு ஜூனில் 95.58 லட்சம் லட்டுகள் வினியோகிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 1.13 கோடிலட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதா தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications