Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வா ஜெயிக்க வச்சதுக்கு என்ன செஞ்ச? சாமி ஆடிய படி பெண் ஆக்ரோஷம்! திகைத்து போன அமைச்சரின் கணவர்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியின் கணவர் செல்வராஜிடம் சாமி ஆடிய படி பெண் ஒருவர் எழுப்பிய கேள்விகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மகா மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத தீர்த்த திருக்குடம் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கயல்விழி மற்றும் அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பக்தர்களுடன் பக்தராக தீர்த்தக்குடம் சுமந்து சென்று மகா மாரியம்மன் கோவில் தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்.

Adi Dravidar Welfare Minister Kayalvizhi husband Selvaraj was asked a question by a woman at Mariamman temple.

அதைத் தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு கோவிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த போது, சாமி ஆடிய படி பெண் ஒருவர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அருகே வந்து அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி ஆக்ரோஷத்தை காட்டினார்.

அமைச்சர் கயல்விழியின் கணவர் பெயர் செல்வராஜ் என்பதால், ''செல்வா, ஜெயிக்க வச்சதுக்கு என்னப்பா செஞ்ச, அமைச்சர் ஆனதிலிருந்து தொகுதிக்கு என்ன செஞ்சீங்க, நான் உன்னை ஜெயிக்க வச்சனா இல்லையா'' என பெருங்குரலில் முழக்கமிட்டார்.

இதென்னடா வம்பா போச்சு என்பதை போல் அமைச்சருடன் வந்திருந்தவர்கள் விழி பிதுங்கி நின்றனர். இதனிடையே கோவில் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வேக வேகமாக அமைச்சர் கயல்விழி செல்வராஜும் அவரது கணவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Adi Dravidar Welfare Minister Kayalvizhi husband Selvaraj was asked a question by a woman at Mariamman temple.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதே மகா மாரியம்மன் கோவிலில் சாமி ஆடிய பெண்ணிடம் அமைச்சர் கயல்விழியின் கணவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்ததாக கூறப்படுகிறது.

அமைச்சராகி 2 ஆண்டுகள் ஆன பிறகும் எதுவும் செய்யவில்லை என கயல்விழியையும், அவரது கணவர் செல்வராஜையும் சாமி ஆடி பெண் கேள்வி கேட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எல்.முருகனை தாராபுரம் தொகுதியில் தோற்கடித்து வெற்றி பெற்றதால் கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி தேடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கயல்விழி ஆசிரியையாக இருந்து அமைச்சரானவர் என்பது கூடுதல் தகவலாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+