திருப்பூர்: இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனை போட்டி நிலவுவதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (செப். 30) தாராபுரம் சட்டப்பேரவை தொகுதியில், தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பரப்புரை மேற்கொண்டுள்ளார். தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த விஜய், கோவையில் இருந்து தாராபுரத்திற்கு விஜய் அவரது பிரச்சார வேனில் பயணம் செய்தார். தாராபுரம் மாருதிநகரில் பரப்புரை மேற்கொள்கிறார் விஜய். இதனால், சாலையில் இருபுறமும் திரண்டு நிற்கும் பொதுமக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Sep 30, 2026, 5:12 pm IST
முதலமைச்சர் விஜய்க்கு செங்கோல் பரிசளிக்கப்பட்டது. முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் புத்தகங்கள் பரிசுகளை அளித்தனர்.
Sep 30, 2026, 5:10 pm IST
“அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பா ஆட்சி, இப்போது நடப்பது பிள்ளைகளின் ஆட்சி.. நம் வீட்டு பிள்ளைகளின் ஆட்சி. இதுதான் உண்மையான மக்களாட்சி.. வெற்றி நிச்சயம். கான்ஃபிடண்ட்டா இருங்க மக்களே..”
- தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Sep 30, 2026, 5:09 pm IST
திமுக அதிமுக 2 பேரும் ஒண்ணுதான்.. வெளியில் தான் வேஷம்.. 2 பேரும் சொல்லும் பொய்களை எல்லாம் நம்பாதீங்க.. நம் ஆட்சி அமையக்கூடாது என சதி செய்த அவர்களுக்கு நாம் பாடம் புகட்டியே ஆகவேண்டும். நமது சின்னம் விசில்.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Sep 30, 2026, 5:06 pm IST
இந்த தீயசக்தி திமுகவுக்கு ஓட்டு போடுவீங்களா? எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த இந்த மற்றும் பலருக்கு ஓட்டு போடுவீங்க?
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் மக்களிடம் கேள்வி
Sep 30, 2026, 5:06 pm IST
எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய்!
“எம்ஜிஆர் மாதிரி, ஜெயலலிதா மாதிரி.. இன்னிக்கும் தில்லா இந்த திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும் தான். அது எம்ஜிஆரின் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நல்லாவே தெரியும்.”
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Sep 30, 2026, 5:03 pm IST
“மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறொம் எனச் சொல்வாராம், ஆனால் அதை மதிக்க மாட்டாராம்.. என்னவெல்லாம் சதி வேலை செய்யலாம்.. யார் கூட எல்லாம் கூட்டு சேரக்கூடாதோ அவர்களுடன் எல்லாம் கூட்டு சேர்வது.. அவர்கள் பேசுவதையே இவர்களும் பேசுவார்கள். அவர்கள் தான் மற்றும் பலர். இருவருக்கும் ஒரே ஓனர் தான். நீங்கள் என்ன சதி வேலை செய்தாலும்... கடவுளும் மக்களும் நம்முடன் இருக்கும்போது.. நீங்க ஒண்ணும்..!”
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Sep 30, 2026, 5:00 pm IST
கொளத்தூர் மக்களுக்கு கோடானு கோடி நன்றி என சிரித்துக்கொண்டே சொல்கிறார் மு.க. ஸ்டாலின். இனிமேல் வரப்போகும் எல்லா தேர்தலிலும் மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை, கோடானு கோடி நன்றி என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Sep 30, 2026, 4:55 pm IST
கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்துச் சொல்வோம், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்துச் சொல்வோம். பக்ரீத்துக்கும் வாழ்த்துச் சொல்வோம். மற்றவர்கள் மாதிரி வெளியில் வேஷம் போட்டுக்கொண்டு, பதுங்கிக்கிட்டு திமுக மாதிரி எல்லாம் எப்போதுமே நாம் இருக்க மாட்டோம்.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Sep 30, 2026, 4:53 pm IST
அண்ணாவையும் மறந்துவிட்டு, தீயசக்தி திமுகவுடன் மறைமுகமாக பினாமியாக கூட்டு சேர்ந்து சுயநலமாக சுத்துறவங்களும் நாம கிடையாது - அதிமுகவை விமர்சித்த முதல்வர் விஜய்
Sep 30, 2026, 4:51 pm IST
2026 தேர்தலில் மக்கள் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, நம் குடும்பம் தான் இன்னும் அதிகாரத்தில் இருக்கிறது என நினைக்கும் மன்னராட்சி மனப்பான்மை எல்லாம் நமக்கு கிடையாது.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Sep 30, 2026, 4:50 pm IST
திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கப்படும். தாராபுரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.
Sep 30, 2026, 4:48 pm IST
முதல் 100 நாட்களில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2 முதல் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும்.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Sep 30, 2026, 4:48 pm IST
தவெக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு வருகிறார் தமிழக முதலமைச்சர் விஜய்.
Sep 30, 2026, 4:44 pm IST
தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஊழல், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகத்தை முழுமூச்சோடு உறுதிப்படுத்தி வருகிறோம்.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Sep 30, 2026, 4:39 pm IST
கண்ணீர் விட்ட சத்யபாமா - தேற்றிய முதல்வர் விஜய்
“2 மாதமாக செல்போனை பார்க்க முடியவில்லை. ஆபாசமாக பேசுகிறார்கள். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள்” எனப் பேசியபடி கண்ணீர் விட்டார் தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் சத்யபாமா. அவரை அருகில் வந்து தோளைப் பிடித்து தேற்றினார் முதல்வர் விஜய்.
Sep 30, 2026, 4:39 pm IST
நான் தான் முதல்வர் என புதுச்சேரியில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. திமுகவோடு இணைந்து செயல்படுவது பிடிக்காமல் தான் வந்தேன். 2 மாதமாக செல்போனை பார்க்க முடியவில்லை. ஆபாசமாக பேசுகிறார்கள்.
- தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் சத்யபாமா பேச்சு
Sep 30, 2026, 4:36 pm IST
எடப்பாடிக்கு நன்றி - சத்யபாமா
“எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. அவர் திமுகவுடன் உடன்படிக்கை செய்துகொள்ளாவிட்டால் நான் அதிமுகவை விட்டு இங்கு வந்திருக்க மாட்டேன்” - தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா பேச்சு
Sep 30, 2026, 4:32 pm IST
எம்ஜிஆரின் மறுபிறவி நம் தலைவர் விஜய் - தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா பேச்சு
Sep 30, 2026, 4:30 pm IST
கூவத்தூர் குறுக்குவழி சாமி - அருண்ராஜ் பேச்சு
“எடப்பாடி பழனிசாமி இபிஎஸ் அல்ல, அவர் கேகேஎஸ்.. கூவத்தூர் குறுக்குவழி சாமி தான் அவர். கூவத்தூர் குறுக்குவழி சாமியிடம் நான் கேட்கிறேன்.. ஓபிஎஸ்ஸை ஏன் கட்சியை விட்டு நீக்கினீர்கள்? திமுகவுடன் தொடர்பு என்றுதானே.. இன்றைக்கு நீங்களும் அதையே செய்துள்ளீர்களே” - அமைச்சர் அருண்ராஜ் பேச்சு.
Sep 30, 2026, 4:25 pm IST
கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 61 இடங்களில் 28 இடங்களில் வென்று இது தவெகவின் கோட்டை என நிரூபித்துள்ளோம். கொங்கு மண்டலத்தின் பிரதிநிதி எனச் சொல்லிக்கொண்டு தலைமைப் பண்பே இல்லாத ஒருவர் உண்மைக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருகிறார்.
- அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
Sep 30, 2026, 4:22 pm IST
“தமிழ்நாட்டின் தங்கமகன், தாய்மார்களின் செல்லப்பிள்ளை.. பெண்களின் பாதுகாவலன்.. குழந்தைகளின் தாய்மாமன்.. அது யாரு? வேற யாரு.. நம்ம தளபதி பாரு..”
- அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
Sep 30, 2026, 4:19 pm IST
எதிர்காலத் தலைமுறையை மக்கள் நம் முதலமைச்சரிடம் தான் ஒப்படைத்துள்ளார்கள். தாராபுரம் இனி விசில் சின்னத்தின் கோட்டை.
- அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
Sep 30, 2026, 4:19 pm IST
அமைச்சர் ஆனந்த் பேச்சு
சத்யபாமாவுக்கு செலுத்தப்போகும் ஒவ்வொரு வாக்கும் விஜய்க்கு செலுத்தும் வாக்கு. நம் இலக்கு ஒன்றே, அது தாராபுரத்தின் முன்னேற்றம். தாராபுரம் வளரட்டும், தளபதி வெல்லட்டும் - அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு
Sep 30, 2026, 4:15 pm IST
தாராபுரம் மண் சாதாரண மண் அல்ல, உழைப்பை விதைத்த மண் -
அமைச்சர் என்.ஆனந்த்
Sep 30, 2026, 4:15 pm IST
தாராபுரம் மண்ணிற்கு முதலமைச்சர் விஜய் வந்திருக்கிறார் - அமைச்சர் என்.ஆனந்த்
Sep 30, 2026, 4:15 pm IST
தாராபுரம் மக்களின் கனவுகளை நிறைவேற்றப்போகிறவர் தான் முதலமைச்சர் விஜய் - அமைச்சர் என்.ஆனந்த்
“வெற்றிவேல் வீரவேல்.. Praise the lord.. அஸ்ஸலாமு அலைக்கும்.... எங்க ஸ்டைலில் சொல்றதுன்னா பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனக் கூறி பேசத் தொடங்கினார் அமைச்சர் ராஜ்மோகன்.
Sep 30, 2026, 3:54 pm IST
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் மேடைக்கு வந்த விஜய்யை தவெக அமைச்சர்கள் வரவேற்றனர்.
Sep 30, 2026, 3:54 pm IST
முதல்வர் விஜய்க்கு காங்கேயம் காளை சிலையை பரிசளித்தார் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா.
READ MORE
3:25 PM, 30 Sep
தடுப்புகளை தாண்டிய ரசிகர்கள்
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தி வருகிறார். தடுப்புகளை தாண்டி, விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து பொதுமக்கள், விஜய் ரசிகர்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3:27 PM, 30 Sep
விஜய் ரோடு ஷோ
இருபுறமும் திரண்டு நிற்கும் மக்களை நோக்கி கையசைத்தபடி ரோடு ஷோ நடத்தி வருகிறார் முதல்வர் விஜய். இன்னும் சற்று நேரத்தில் பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்துக்கு வருகை தருகிறார் முதல்வர் விஜய்.
3:38 PM, 30 Sep
மக்களை நோக்கி கையசைத்தபடியே பிரச்சார திடலுக்கு வந்து சேர்ந்தார் விஜய்
3:38 PM, 30 Sep
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் திடலுக்கு வருகை புரிந்தார் விஜய்
3:43 PM, 30 Sep
செம்மலைக்கு தவெக துண்டு அணிவித்து கட்சிக்கு வரவேற்றார் முதல்வர் விஜய்
3:43 PM, 30 Sep
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைந்தார்
3:54 PM, 30 Sep
முதல்வர் விஜய்க்கு காங்கேயம் காளை சிலையை பரிசளித்தார் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா.
3:54 PM, 30 Sep
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் மேடைக்கு வந்த விஜய்யை தவெக அமைச்சர்கள் வரவேற்றனர்.
4:11 PM, 30 Sep
“வெற்றிவேல் வீரவேல்.. Praise the lord.. அஸ்ஸலாமு அலைக்கும்.... எங்க ஸ்டைலில் சொல்றதுன்னா பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனக் கூறி பேசத் தொடங்கினார் அமைச்சர் ராஜ்மோகன்.
தாராபுரம் மக்களின் கனவுகளை நிறைவேற்றப்போகிறவர் தான் முதலமைச்சர் விஜய் - அமைச்சர் என்.ஆனந்த்
4:15 PM, 30 Sep
தாராபுரம் மண்ணிற்கு முதலமைச்சர் விஜய் வந்திருக்கிறார் - அமைச்சர் என்.ஆனந்த்
4:15 PM, 30 Sep
தாராபுரம் மண் சாதாரண மண் அல்ல, உழைப்பை விதைத்த மண் -
அமைச்சர் என்.ஆனந்த்
4:19 PM, 30 Sep
அமைச்சர் ஆனந்த் பேச்சு
சத்யபாமாவுக்கு செலுத்தப்போகும் ஒவ்வொரு வாக்கும் விஜய்க்கு செலுத்தும் வாக்கு. நம் இலக்கு ஒன்றே, அது தாராபுரத்தின் முன்னேற்றம். தாராபுரம் வளரட்டும், தளபதி வெல்லட்டும் - அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு
4:19 PM, 30 Sep
எதிர்காலத் தலைமுறையை மக்கள் நம் முதலமைச்சரிடம் தான் ஒப்படைத்துள்ளார்கள். தாராபுரம் இனி விசில் சின்னத்தின் கோட்டை.
- அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
4:22 PM, 30 Sep
“தமிழ்நாட்டின் தங்கமகன், தாய்மார்களின் செல்லப்பிள்ளை.. பெண்களின் பாதுகாவலன்.. குழந்தைகளின் தாய்மாமன்.. அது யாரு? வேற யாரு.. நம்ம தளபதி பாரு..”
- அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
4:25 PM, 30 Sep
கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 61 இடங்களில் 28 இடங்களில் வென்று இது தவெகவின் கோட்டை என நிரூபித்துள்ளோம். கொங்கு மண்டலத்தின் பிரதிநிதி எனச் சொல்லிக்கொண்டு தலைமைப் பண்பே இல்லாத ஒருவர் உண்மைக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருகிறார்.
- அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
4:30 PM, 30 Sep
கூவத்தூர் குறுக்குவழி சாமி - அருண்ராஜ் பேச்சு
“எடப்பாடி பழனிசாமி இபிஎஸ் அல்ல, அவர் கேகேஎஸ்.. கூவத்தூர் குறுக்குவழி சாமி தான் அவர். கூவத்தூர் குறுக்குவழி சாமியிடம் நான் கேட்கிறேன்.. ஓபிஎஸ்ஸை ஏன் கட்சியை விட்டு நீக்கினீர்கள்? திமுகவுடன் தொடர்பு என்றுதானே.. இன்றைக்கு நீங்களும் அதையே செய்துள்ளீர்களே” - அமைச்சர் அருண்ராஜ் பேச்சு.
4:32 PM, 30 Sep
எம்ஜிஆரின் மறுபிறவி நம் தலைவர் விஜய் - தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா பேச்சு
4:36 PM, 30 Sep
எடப்பாடிக்கு நன்றி - சத்யபாமா
“எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. அவர் திமுகவுடன் உடன்படிக்கை செய்துகொள்ளாவிட்டால் நான் அதிமுகவை விட்டு இங்கு வந்திருக்க மாட்டேன்” - தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா பேச்சு
4:39 PM, 30 Sep
நான் தான் முதல்வர் என புதுச்சேரியில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. திமுகவோடு இணைந்து செயல்படுவது பிடிக்காமல் தான் வந்தேன். 2 மாதமாக செல்போனை பார்க்க முடியவில்லை. ஆபாசமாக பேசுகிறார்கள்.
- தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் சத்யபாமா பேச்சு
4:39 PM, 30 Sep
கண்ணீர் விட்ட சத்யபாமா - தேற்றிய முதல்வர் விஜய்
“2 மாதமாக செல்போனை பார்க்க முடியவில்லை. ஆபாசமாக பேசுகிறார்கள். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள்” எனப் பேசியபடி கண்ணீர் விட்டார் தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் சத்யபாமா. அவரை அருகில் வந்து தோளைப் பிடித்து தேற்றினார் முதல்வர் விஜய்.
4:44 PM, 30 Sep
தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஊழல், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகத்தை முழுமூச்சோடு உறுதிப்படுத்தி வருகிறோம்.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
4:48 PM, 30 Sep
தவெக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு வருகிறார் தமிழக முதலமைச்சர் விஜய்.
4:48 PM, 30 Sep
முதல் 100 நாட்களில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2 முதல் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும்.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
4:50 PM, 30 Sep
திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கப்படும். தாராபுரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.
4:51 PM, 30 Sep
2026 தேர்தலில் மக்கள் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, நம் குடும்பம் தான் இன்னும் அதிகாரத்தில் இருக்கிறது என நினைக்கும் மன்னராட்சி மனப்பான்மை எல்லாம் நமக்கு கிடையாது.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
4:53 PM, 30 Sep
அண்ணாவையும் மறந்துவிட்டு, தீயசக்தி திமுகவுடன் மறைமுகமாக பினாமியாக கூட்டு சேர்ந்து சுயநலமாக சுத்துறவங்களும் நாம கிடையாது - அதிமுகவை விமர்சித்த முதல்வர் விஜய்
4:55 PM, 30 Sep
கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்துச் சொல்வோம், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்துச் சொல்வோம். பக்ரீத்துக்கும் வாழ்த்துச் சொல்வோம். மற்றவர்கள் மாதிரி வெளியில் வேஷம் போட்டுக்கொண்டு, பதுங்கிக்கிட்டு திமுக மாதிரி எல்லாம் எப்போதுமே நாம் இருக்க மாட்டோம்.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
5:00 PM, 30 Sep
கொளத்தூர் மக்களுக்கு கோடானு கோடி நன்றி என சிரித்துக்கொண்டே சொல்கிறார் மு.க. ஸ்டாலின். இனிமேல் வரப்போகும் எல்லா தேர்தலிலும் மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை, கோடானு கோடி நன்றி என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
- தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Dharapuram By election Vijay campaign LIVE: Chief Minister Joseph Vijay is campaigning today in the Dharapuram Assembly constituency—where a by-election is set to take place—in support of TVK candidate Sathyabhama.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.