கையில் துப்பாக்கி, டைம்பாம்.. முகமூடி அணிந்து திருப்பூர் வங்கியில் கொள்ளை முயற்சி.. மாணவர் துணிகரம்
திருப்பூர் அருகே பட்டப்பகலில் கையில் துப்பாக்கி, டைம்பாமுடன் சென்று வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே துப்பாக்கி, டைம்பாம் ஆகியவற்றை காட்டி முகமூடி அணிந்து பட்டப்பகலில் வங்கியில் கல்லூரி மாணவர் கொள்ளையடிக்க முயன்றார். இந்த வேளையில் வாடிக்கையாளர் ஒருவர் அந்த மாணவரின் தலையில் அடிக்கவே அவர் நிலைக்குலைந்தார். இதையடுத்து அனைவரும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில் கனரா வங்கி உள்ளது. இன்றும் வழக்கம்போல் வங்கி செயல்பட்டு வந்தது. பணியாளர்கள் தங்களின் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தான் மதியம் சுமார் 12.50 மணியவில் வங்கியில் சில வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த வேளையில் திடீரென்று ஒருநபர் வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்தார்.

துப்பாக்கி, டைம்பாம் இருப்பதாக..
இந்த நபர் பார்க்க சற்று வித்தியாசமாகவும், சந்தேகப்படும்படியாகவும் இருந்தார். உடலில் பர்தா அணிந்திருந்த அந்த நபர், முகமூடி மற்றும் கையுறை அணிந்து கொண்டு அடையாளத்தை மறைத்து பணியாளர்களை மிரட்ட தொடங்கினார். நான் ‛‛கொள்ளையடிக்க வந்திருக்கிறேன். யாரும் சத்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்'' என தெரிவித்தார். மேலும் மேலும் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டினார். அதோடு கையில் ‛டைம்பாம்' இருக்கிறது. சத்தம் போட்டால் வெடிக்க செய்துவிடுவேன் என்று மிரட்டினார்.

தலையில் அடித்து பிடித்த மக்கள்
இதனால் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பயத்தில் உறைந்தனர். இருப்பினும் கூட சில வாடிக்கையாளர் ஒருவர் துணிந்து கொள்ளையடிக்க வந்த நபரின் தலையில் தாக்கினார். அவர் நிலைகுலையவே அனைவரும் ஒன்றாக இணைந்து அந்த நபரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் டம்மி துப்பாக்கியை காட்டியும், டைம்பாம் என பயமுறுத்தியும் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

கல்லூரி மாணவர்
மேலும் அலங்கியம் காந்தி நரை சேர்ந்த சுரேஷ் (வயது 19) என்பதும், கல்லூரியில் படித்து வரும் அவர் வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பர்தா, முகமூடி, கையுறை அணிந்து மிரட்டியதும் தெரியவந்தது. இதுபற்றி அலங்கியம் வங்கி கிளை மேலாளர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பறிமுதல்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை இன்று ஏற்படுத்தியது. கைதான சுரேசிடம் இருந்து முகமூடி, பர்தா, பொம்மை துப்பாக்கி, டம்மி டைம்பாம், கத்தி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தான் சுரேஷ் சமீபத்தில் நடிகர் அஜித்தின் துணிவு படம் பார்த்ததாகவும், அந்த பாணியில் கொள்ளையடிக்க முயன்றதாகவும் தகவல்கள் பரவின. இருப்பினும் இதுனை போலீசார் உறுதி செய்யவில்லை.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications