மகாலட்சுமியுடன் ஜாலி.. மேஸ்திரியின் "சின்ன வீடு" சித்தாள்.. ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூரம்!
பெண்ணை ஆசிட் வீசி கொன்ற மேஸ்திரி கைது செய்யப்பட்டார்
Recommended Video
திருப்பூர்: ஜாலியாக இருந்துவிட்டு.. அடுத்த செகண்டே கழுத்தை நெரித்து கொன்று, ஆசிட்டை ஊற்றி சித்தாளை எரித்துவிட்டார் மேஸ்திரி!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஒரு புதரில் கடந்த 29 ம் தேதி அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பெண் யார் என்ற விவரம் தெரியவில்லை. உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இருந்தன. முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தது.
அதனால், கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது.
இதனிடையே, எல்லப்பநாயக்கன் வலசை சேர்ந்த மகாலட்சுமி என்ற சித்தாள் வேலை செய்யும் பெண் மாயமானதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சித்தாள்
மகாலட்சுமி கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தவர். 2 மகள்கள் இருக்கிறார்கள். பிழைப்புக்காக சித்தாள் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று, ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற மேஸ்திரியுடன் மகாலட்சுமி சென்றதாக சிலர் சொல்லவும், சந்தேகத்தின்பேரில் கருப்பசாமியை விசாரித்தனர் போலீசார். அப்போதுதான் பகீர் தகவல் வெளியானது.

மகாலட்சுமி
மகாலட்சுமிக்கு வயசு 40, கருப்பசாமிக்கு வயசு 46! மகாலட்சுமியின் தனிமையை பயன்படுத்தி, கருப்பசாமி தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். ஒரு வருடமாக இவர்களின் நெருக்கம் அதிகமாகி உள்ளது. ஆனால், கருப்பசாமி தொல்லை தாங்காமல், 2 மாதமாக சரியாக மகாலட்சுமி அவருடன் பேசாமல் இருந்திருக்கிறார்.

சமாதானம்
இதுதான், மேஸ்திரிக்கு கோபம் அதிகமாகி உள்ளது. அதனால் கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று, மகாலட்சுமியை நேரில் சந்தித்து சமாதானம் பேச வேண்டும் என்று சொல்லி உள்ளார். இதையடுத்து, அவரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு, புதர் மண்டிக் கிடந்த கூடல் மாநகர் மனைப் பிரிவுக்கு சென்றார் மேஸ்திரி.

ஆசிட்
அங்கேயே உட்கார்ந்து தண்ணி அடித்துள்ளார்.. சித்தாளுடன் புதர் பகுதியில் ஜாலியாக இருந்திருக்கிறார்.. இதன்பிறகுதான் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அடையாளம் தெரிய கூடாது என்பதற்காக, ஏற்கனவே ரெடியாக எடுத்து சென்றிருந்த ஆசிட்டை எடுத்து, மகாலட்சுமி முகத்தில், தலையில் ஊற்றி எரித்துவிட்டு தப்பி உள்ளார். இந்த விவரங்கள் எல்லாம் போலீசார் சேகரித்ததை அடுத்து, கொலையாளி மேஸ்திரியை கைது செய்தனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications