என்னாது அதிமுக பொது செயலாளரா? அந்த கடிதமே போலி.. ரெடி செய்தவர் "இவர்தான்".. கொதிக்கும் ஓபிஎஸ் தரப்பு
திருப்பூர்: பொதுச் செயலாளர் என்று சட்ட அமைச்சகம் அனுப்பியதாக போலியான ஒரு கடிதத்தை உருவாக்கியுள்ளவர் யார் என்ற தகவலை ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக யாருக்கு என்ற கேள்விக்கு நிறைய சாதகமான விஷயங்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நடந்துள்ளது. ஓபிஎஸ் பக்கம் தொண்டர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் காசு கொடுத்து அழைத்து வந்தவர்கள், அவர்கள் அதிமுக உறுப்பினரே கிடையாது என எடப்பாடி அணியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
பதிலுக்கு இதே குற்றச்சாட்டை ஓபிஎஸ் அணியினரும் முன் வைக்கிறார்கள். அதிமுக பொருளாளராக ஓபிஎஸ் நீக்கப்பட்டு அந்த பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அதிமுகவின் வங்கிக் கணக்கை கையாளும் உரிமை தனக்கு தர வேண்டும் என சீனிவாசன் கடிதம் எழுதிய நிலையில் அந்த உரிமை அவருக்கே வந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் கடிதம் எழுதியது வேறு கதை.

அதிமுக தலைமை அலுவலகம்
அது போல் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஜி20 உச்ச மாநாட்டுக்கான ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு மத்திய அரசு அழைப்பிதழை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியிருந்தது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர்
அது போல் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் வரவு செலவு கணக்கை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொண்டது. இந்த நிலையில் 3ஆவது முறையும் ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கிடைத்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. அதில் ஒரு படி மேலே போய் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகின. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரட்டும் என ஓபிஎஸ் கூறி வரும் நிலையில் அங்கு தேர்தல் ஆணையம் எடப்பாடியை அங்கீகரித்து கணக்கு தாக்கலை ஏற்றுக் கொண்டது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என தெரிகிறது.

போலி கடிதம்
இப்படியுள்ள நிலையில் அந்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டது என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தனியார் கூட்டரங்கிவ் ஓ.பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் செய்தியாளிடம் பேசும்போது, எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளர் என போலி கடிதம் தயார் செய்யப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி அணியில் பணம்தான் விளையாடுகிறது.

அடிமட்ட தொண்டர்கள்
ஓட்டுபோடுகின்ற மக்கள், அடிமட்ட தொண்டர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரின் முழு ஆதரவு ஓ பி.ஸ். தலைமை வேண்டும் என்பதில்தான் இருக்கிறது என்றார். அது போல் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ், பேசுகையில் தம்பிதுரை சட்ட அமைச்ராக இருந்தவர். இதனால் அங்குள்ள அதிகாரிகளை வைத்து தவறான கடிதங்களை தயார் செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு வந்த கடிதம் சட்ட அமைச்சகம் மூலம் வரவில்லை என்று தெரிவித்தார். வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த எடப்பாடி தரப்பினர் இப்படி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சத்தமில்லாமல் முடிந்த சாவி விவகாரம்! CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி.. பிளான் என்ன -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!











Click it and Unblock the Notifications