தாராபுரத்தில் தங்கம் வாங்க நகைக்கடைக்குள் நுழைந்த தங்கவேலு.. திருப்பூரில் அசத்தலான சம்பவத்தை பாருங்க
திருப்பூர்: தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. அதிலும் தங்கம் விலை உயர்ந்ததிலிருந்தே, நகை கொள்ளைகளும், வீடு புகுந்து நகை திருடுவதும் தினந்தோறும் தொடர்ந்தவாறே உள்ளது.. அதிலும் நேற்று முன்தினம், ஒரே நாளில் 2 முறை தங்கத்தின் விலை உயர்ந்து, வரலாற்று சாதனையும் நிகழ்ந்துள்ளது.. இதனால் ஏழை, நடுத்தர மக்களால் தங்கத்தை நினைத்துகூட பார்க்க முடியாத நிலைமை உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், திருப்பர் ரோட்டில் சொளையாக ரூ.50ஆயிரம் கீழே கிடந்துள்ளது.. இந்த பணம் கடைசியில் என்ன ஆயிற்று தெரியுமா?
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி சாலையில் உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்.. இவருக்கு 35 வயதாகிறது.. நவதானிய மண்டி ஒன்றை சொந்தமாக வைத்து வியாபாரம் செய்து வருகிறார்..

தானியங்கள் - நவதானிய மண்டி
நேற்று மதியம் தனக்கு தேவையான தானியங்களை வாங்குவதற்காக, தாராபுரம் சின்னக்கடை வீதியில் செயல்பட்டு வரும் நவதானிய மண்டிக்கு வந்துள்ளார் தங்கவேலு.. அங்கு கடைக்கு தேவையான தானியங்களை ஆர்டர் செய்துவிட்டு, தங்க நகை வாங்குவதற்காக தாராபுரம் பொள்ளாச்சி சாலைக்கு வந்தார்.
அங்குள்ள நகைகடை ஒன்றில் செல்வதற்காக தன்னுடைய டாட்டா ஏஸ் வாகனத்தை எடுக்க முயன்றார்.. அப்போது எதிர்பாராதவிதமாக, தங்கவேலுவின் பாக்கெட்டிலிருந்து ரொக்கப்பணம் ஐம்பதாயிரம் ரூபாய் தவறி கீழே விழுந்துவிட்டது. இது தெரியாமல் தங்கவேலுவும் நகைக் கடைக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

ஆட்டோ டிரைவர்
அங்குள்ள அலங்கியம் சாலை பழைய காந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர் வசித்து வருகிறாராம்.. ஆட்டோ டிரைவர் லட்சுமணன் என்பவர், பள்ளி முடிந்து 7 பள்ளிமாணவிகளை ஆட்டோவில் அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்..
NGGO காலனியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியிலிருந்து 9ஆம் வகுப்பு மாணவிகள் பிரகதீஸ்வரி, பரணீ ஸ்ரீ, ராணி, மகாலட்சுமி, ஐந்தாம் வகுப்பு மாணவி ஹரிணி, சர்ச் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் பள்ளி மாணவிகள் 6ஆம் வகுப்பு மாணவிகள் சாதனா, ருத்ரா ஸ்ரீ ஆகியோரை லட்சுமணன் அழைத்து வந்துள்ளார்.

ரூ.50 ஆயிரம் - மினி வேன்
அப்போதுதான் சாலையில் கிடந்த 50,000 ரொக்க பணத்தை பார்த்து லட்சுமணன் உட்பட மாணவிகள் அத்தனை பேரும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.. உடனே அந்த பணத்தை தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்று குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சரவணனிடம் அனைவருமே ஒப்படைத்தனர்.
உடனே போலீசாரும், சின்ன கடைவீதி அருகே உள்ள காவல்துறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், தானியமண்டியில் இருந்து தங்கவேலு வெளியே வந்து, தன்னுடைய மினி வேனை எடுக்க முயன்றதும், தங்கவேலுவின் உள்ளாடை பாக்கெட்டில் இருந்து ரொக்க பணம் கீழே விழுவதும் அதில் பதிவாகியிருந்தது.

மாணவிகளுக்கு பாராட்டு, வாழ்த்து
இதையடுத்து, உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு பணத்தை தொலைத்தவரின் முகவரியை கண்டுபிடித்த குற்றப்பிரிவு போலீசார் தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தங்கவேலுவை வரவழைத்தனர்.. அப்போது 7 பள்ளி மாணவிகள், ஆட்டோ டிரைவர் லட்சுமணன் முன்னிலையில் விசாரணை நடத்தி 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை தங்கவேலுவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சாலையில் கிடந்த ரொக்க பணத்தை தங்களை அழைத்து வந்த ஆட்டோ டிரைவருடன் எடுத்து போலீஸ் ஸ்டேஷனில் பொறுப்பாக ஒப்படைத்த பள்ளி மாணவிகளின் செயலையும் ஆட்டோ டிரைவரின் நாணயத்தையும் போலீசாரும், அங்கிருந்த பொதுமக்களும் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.

-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications