திருப்பூரில் அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் நடந்த பஞ்சாயத்து.. தலை துண்டித்து போலீஸ்காரர் கொடூர கொலை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் தலையை துண்டித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், சண்முக சுந்தரம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எஸ்எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் தளவாய் பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (52). இவர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருந்த போது 100 எண்ணுக்கு வந்த ஓர் அழைப்பில் தந்தை மகன் பிரச்சனை தொடர்பாக புகார் வந்துள்ளது.
அந்தப் புகாரில், குடிமங்கலம் பகுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகனுக்கு இடையே எழுந்த பிரச்சனையில் தந்தை, மகனை கொல்ல அரிவாளுடன் துரத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், தனது ஓட்டுநருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சண்முகவேலை வெட்டிக் கொலை செய்துள்ளனர். மேலும், ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மகனையும் தந்தை வெட்டியுள்ளார்.
இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகக்க கூறப்படும் தந்தை, மகன் உள்பட மூன்று பேர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்எஸ்ஐ கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தெரிவித்துள்ளார். தந்தை, மகனுக்கு இடையேயான பிரச்சனையை விசாரிக்கச் சென்ற போலீஸ் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
சுயம்புவாக வளர்ந்த திருப்பூர்.. இப்போ இந்தியாவுக்கு பாடம் கற்று தருகிறது! -
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications