பீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருப்பூரில் இன்று நடத்த போகும் கூட்டம் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருப்பூரில் இன்று நடத்த போகும் கூட்டம் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அமமுக கட்சிக்குள் தற்போது உட்கட்சி பூசல் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. முக்கியமாக அமமுக கட்சியில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் புகழேந்தி இடையிலான சண்டை தற்போது வலுத்துள்ளது.

டிடிவி தினகரன் மீது நாளுக்கு நாள் புகழேந்தி புகார்களை வீசி வருகிறார். பல்வேறு முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே அமமுகவில் இருந்து விலகி அதிமுக மற்றும் திமுகவில் இணைந்துவிட்டார்கள்.

இன்னொரு சண்டை

இன்னொரு சண்டை

இந்த நிலையில்தான் புகழேந்தி மற்றும் தினகரன் இடையில் சண்டை நடந்து வருகிறது . கடந்த வாரம் திருப்பூர் மற்றும் கோவை அமமுக நிர்வாகிகள் சார்பாக நடந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் குறித்து புகழேந்தி காரசாரமாக பேசினார். இதில் டிடிவி தினகரன் அவரின் ஆர்கே நகர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

என்ன கோபம்

என்ன கோபம்

இதனால் டிடிவி தினகரன் தரப்பு புகழேந்தி மீது கடும் கோபத்தில் இருக்கிறது. அதேபோல் திருப்பூர் நிர்வாகிகள் மீதும் டிடிவி தினகரன் கோபத்தில் இருக்கிறார். இதனால் திருப்பூரில் கட்சி கூட்டம் ஒன்றை நடத்த டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று திருப்பூரில் கூட்டம் நடக்க உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

திருப்பூரில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையில் பிரச்சனை இல்லை. எல்லோரும் சுமூகமாக இருக்கிறோம். அமமுக இன்னும் வலிமையாக இருக்கிறது. கட்சி நிர்வாகிகள் எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக டிடிவி தினகரன் இந்த கூட்டத்தை நடத்துகிறார் என்கிறார்கள்.

பேச போகிறார்

பேச போகிறார்

இந்த திருப்பூர் கூட்டத்தில் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் முன்னிலை அவர் முக்கிய விஷயங்களை பேச வாய்ப்புள்ளது. புகழேந்தி குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

வைரலாகிறார்

வைரலாகிறார்

இதனால் தற்போது டிடிவி தினகரன் டிவிட்டரில் வைரலாகி வருகிறார்.#TTVinதிருப்பூர் என்ற டேக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவான டிவிட்டுகளை வரிசையாக டிவிட் செய்து வைரலாக்கி வருகிறார்கள். பீனிக்ஸ் பறவையாக தினகரன் மீண்டு வருவார் என்று பலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+