திருப்பூரில் ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொண்ட இரண்டு நண்பர்கள்.. இருவருக்குமே இறுதியில் ட்விஸ்ட்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தத சூர்யா என்பவர் மற்றும் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் வீரபாண்டி பகுதியை சேர்ந்த சிவா என்ற மூன்று நபர்கள் இப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்கள். இதில் இரண்டு நண்பர்கள் ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக மதுபோதையில் நடந்த மல்லுக்கட்டு பெரிய சம்பவமாக மாறி உள்ளது. இதனால் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சினிமா படங்களில் ஒரே பெண்ணை இரண்டு நண்பர்கள் காதலிப்பார்கள், ஒருவரை அந்த பெண் காதலிக்கும், இன்னொருவரை ஏற்காது. இதை பார்த்து காதலில் நிராகரிக்கப்பட்டவர், மோதிக்கொள்வது போல் காட்சிகள் இருக்கும். அதேபோல் சில சமயங்களில், சில பெண்கள் ஒரே நேரத்தில் இரண்டு பையன்களை காதலித்து, ஒருவரை ஏற்பதும் நடக்கிறது. அப்படியான சூழலில் இருவருமே அடித்துக் கொள்வார்கள். அதேபோல் ஒரே பெண்ணை காதலிக்கும் நண்பர்கள், காதல் காரணமாக பகையாளியாக மாறிவிடுவார்கள். அப்படியான ஒரு சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தத சூர்யா என்பவர் மற்றும் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் வீரபாண்டி பகுதியை சேர்ந்த சிவா என்ற மூன்று நபர்கள் இப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்கள்.
அங்குள்ள ஒரு பெண்ணிடம் சூர்யா மற்றும் பிரபு ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் ஏமாற்றிக் கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சூர்யா என்பவர் பிரபு என்ற அவரது நண்பரின் கழுத்தில் தாராபுரம் சாலையில் அழைத்துச் சென்று மது பாட்டிலை உடைத்து வைத்து மிரட்டி கடுமையாக தாக்கி அவள் வர சொன்னாலா நீ வர சொன்னீயா? என்று கேட்டு சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை சிவா எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக போலீசார் சூர்யா மற்றும் சிவா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே பெண்ணுக்காக இரண்டு நண்பர்கள் மோதிக்கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் இளைஞர் விபரீத முடிவு
திருப்பூர் 63 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சுபாஷ், அங்கு விசைத்தறிக்கூடம் வைத்து தொழில் நடத்தி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுபாஷ், மாத்திரையை தின்று மயங்கி விழுந்தார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications