தாராபுரத்தில் விஜய் பிரசார கூட்டம்! போலீசார் சொல்லியும் கேக்கலயே.. தடுப்புகளை உடைத்து ஓடிய தவெகவினர்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரத்தில் விஜய்யின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் தவெகவினர் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு தவெகவினர் அரங்கில் இடம் பிடிக்க ஓடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் பிற்பகல் 3 மணிக்கு வருவார் என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் காலையில் இருந்தே தவெகவினர் குவிந்து வருவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில், தாராபுரத்தில் முதல்வர் விஜய் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.

Vijay Dharapuram Dharapuram by election


விஜய் பிரசாரம்

தாராபுரத்தில் உள்ள மாருதிநகரில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானத்தில் வருகை தரும் முதல்வர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வருகை தருகிறார். முதல்வர் விஜய்யை பார்க்கவும், அவர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்கவும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு தவெகவினர் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால் கூட்ட அரங்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதலே தாராபுரத்தில் உள்ள பிரசார பொதுக்கூட்ட அரங்கிற்கு தவெகவினர் வருகை தர தொடங்கினர். 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என நேற்று தவெக தலைமை கூறியிருந்தது. ஆனால், தற்போது பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வர தொடங்கியுள்ளனர். ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வருகை தருவதை பார்க்க முடிகிறது.

Vijay Dharapuram Dharapuram by election

போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு

போலீசார் அரங்கிற்குள் அனுமதிக்க தொடங்கியதும் முதலில் போய் இடம் பிடிக்க வேண்டும் என ஆர்வ மிகுதியில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு மக்கள் ஓடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிலர் கீழே விழுந்ததில் லேசான காயங்களும் ஏற்பட்டது. சிற்றுண்டிகள் மற்றும் தண்ணீர் மட்டுமே பரப்புரை கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்தாக்குறைக்கு வெயிலும் விட்டு விளாசுகிறது. கூட்ட அரங்கில் 15 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு இருப்பதாக தவெகவினர் மத்தியில் கூறப்படுகிறது.

கடும் வெயில்

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து விஜய் பேச உள்ளார். தாராபுரம் அதிமுக செல்வக்கு உள்ள பகுதியாக உள்ளது. கடந்த தேர்தலில் தவெக இந்த தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், இந்த முறையை வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும் என்று தவெக வியூகம் வகுத்து வருகிறது. எனவே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுகு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய்யின் இன்றைய உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாராபுரம் பகுதியில் கடுமையான வெயிலுக்கு மத்தியிலும் சிறுவர் சிறுமிகளை அழைத்துக்கொண்டு பலரும் பிரசார கூட்டத்திற்கு வருகை தந்ததை பார்க்க முடிகிறது.

Vijay Dharapuram Dharapuram by election

3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கூட்டம் அதிகமாக இருப்பதால் கியூ ஆர் கோடு பரிசோதனை இன்றி போலீசார், மக்களை அனுமதிக்க தொடங்கினர். இது ஒருபக்கம் இருக்க கோவையில் இருந்து சாலை மார்க்கமாக விஜய் வருவதால் வழிநெடுக அவரைக் காண கூட்டம் திரளும் என்பதால் அங்கும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு தாராபுரம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+