ஷவர்மா இருக்கட்டும்... திருச்சி பேக்கரியில் 155 கிலோ கெட்டுப்போன கேக் வகைகள் - அதிகாரிகள் ஷாக்
திருச்சி: தில்லைநகரில் உள்ள பிரபல பேக்கரிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 150 கிலோ கெட்டுப்போன கேக் வகைகள் மற்றும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Recommended Video
திருச்சி தில்லைநகர் பகுதியில் இயங்கி வரும் பேக்கரியில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு பொதுமக்கள் புகாரளித்து இருக்கின்றனர்.

இதனை அடுத்து தில்லை நகரில் உள்ள ஒரு பிரபல கேக் விற்பனை செய்யும் உணவகத்தை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு கெட்டுப்போன 27.45 கிலோ கேக் வகைகள் இருந்துள்ளன. இவற்றை தயாரிக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சுமார் 126.65 கேக் வகைகள் மற்றும் பப்ஸ் தயாரிப்பதற்காக வைத்திருந்த கெட்டுப்போன இறைச்சிகள் என மொத்தம் சுமார் 155 கிலோ கெட்டுப்போன உணவு வகைகள் கண்டறியப்பட்டன. இவற்றை பறிமுதல் செய்து அழித்த அதிகாரிகள், 2 இடங்களுக்கு அவசர தடையாணை நோட்டீஸ் வழங்கினர்.
இதுகுறித்து, மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றைய தினம் மீதமாகும் இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. எளிதில் கெட்டுப்போன மற்றும் காலாவதியான கேக் போன்ற உணவு பொருட்களை உடனே அழித்துவிட வேண்டும்.
ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதிக்கு அருகே காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
மாவட்ட புகார் எண்: 9944959595, 9585959595
மாநில புகார் எண்: 9444042322
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications