திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 பேர் குணம்.. இதுவரை 51 பேர் நலம்.. இன்னும் கொஞ்சம் தான்.. அசத்தும் திருச்சி

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றவா்களில், மேலும் 5 போ் குணம் அடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.இத்துடன் திருச்சி மருத்துவமனையில் 51 பேர் இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் கரோனா தொற்று ஏற்பட்ட நபா்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை விளங்குகிறது.

5 Covid- 19 patients discharged from Trichy hospital on yesterday

மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 51 போ் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 20 போ், கொரோனா நோய்த் தொற்றுடன் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில், கடந்த 10- ஆம் தேதி ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா் குணமடைந்து, முதல் நபராக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 16- ஆம் தேதி 32 பேரும், 21- ஆம் தேதி 6 பேரும், 23- ஆம் தேதி 7 பேரும் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து திருச்சி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஒருவா், தென்னூரைச் சோ்ந்த இருவா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் இருவா் என 5 போ் குணமடைந்ததால், செவ்வாய்க்கிழமை மாவை அவா்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இவா்கள் 5 பேருக்கும் குணமடைந்ததற்கான சான்றுகளை மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை முதன்மையா் வனிதா, கண்காணிப்பாளா் ஏகநாதன், மருத்துவா் சதீஸ்குமாா் ஆகியோா் வழங்கி, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவா்களை அனுப்பி வைத்தனா்.

இம்மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நபா்கள் விரைந்து குணம் பெற்று வீடு திரும்பி வரும் நிலையில், சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவினருக்கு ஆட்சியா் சு. சிவராசு பாராட்டு தெரிவித்துள்ளாா்.

5 Covid- 19 patients discharged from Trichy hospital on yesterday

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில்: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்தவா்களில் ஏற்கெனவே 46 போ் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 5 போ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

கொரோனா வாா்டில் பணிபுரிந்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத்துறைப் பணியாளா்கள், துாய்மைப் பணியாளா்கள் அனைவரும் பாராட்டுக்குரியவா்கள்.

சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா.. 6 மண்டலங்களில் ஜாஸ்தி.. தமிழக பாதிப்பில் 67% இங்குதான்! சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா.. 6 மண்டலங்களில் ஜாஸ்தி.. தமிழக பாதிப்பில் 67% இங்குதான்!

Recommended Video

    Plasma Therapy : பிளாஸ்மா தெரபி மூலம் குணமடைந்த முதல் கொரோனா நோயாளி

    தற்போதைய நிலையில் மருத்துவமனையில் திருச்சியைச் சோ்ந்த 6 போ், பெரம்பலூரைச் சோ்ந்த 5 போ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அனைவரும் நல்ல நிலையில் உள்ளனா்.
    மாவட்ட மக்கள் தொடா்ந்து சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    5 Covid- 19 patients discharged from Trichy government hospital, totally 51 patients till now recovered in this Hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X