மதுரை ஆதினத்தை மிரட்டினால்.. விளைவுகள் மோசமாக இருக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் எச்சரிக்கை!
திருச்சி : மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார் எனவும், மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
அருணகிரிநாதருக்கு பிறகு மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்ந்து திமுக மற்றும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்து சமய அறநிலையத்துறை குறித்து கடுமையான விமர்சனங்களை மதுரை ஆதீனம் முன்வைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மதுரை ஆதினம்
குறிப்பாக, தமிழத்தில் உள்ள கோவில்களை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டுமெனவும் ஆதீனம் கூறியிருந்தார். மதுரை ஆதீனத்தின் இந்தப் பேச்சு குறித்து பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ,"மதுரை ஆதீனம் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக பேசி வருவதாகவும், தமிழகத்தில் ஆதினங்கள் தமிழக அரசுக்கு ஆதரவாக இல்லை என்று தோற்றத்தை உருவாக்க நினைப்பதாகவும், மதுரை ஆதீனம் இதேபோல் தொடர்ந்து பேசி வந்தால் பதில் சொல்வதற்கு பல வழிகள் இருக்கிறது என்று கூறினார்.

அமைச்சர் சேகர் பாபு
மேலும் "எங்களுக்கு பாயவும் தெரியும் பதுங்கி இருப்பதை பயமாக கருதக்கூடாது. மதுரை ஆதினம் அரசியல்வாதி போல பேசக்கூடாது" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார் இந்நிலையில் மதுரை ஆதீனத்தை மிரட்டும் தொனியில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாக புகார் எழுந்தது. தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ள நிலையில் மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை எச்சரிக்கை
திருச்சியில் பாஜகவின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாப புது காஸ்டியூம் போட்டுள்ளார். மீண்டும் காவி வேட்டி கட்ட துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

ஊழல் குற்றச்சாட்டு
சிதம்பரம் கோவில் விவகாரத்திலும் அமைச்சர் சேகர் பாபு தலையிடுகிறார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் போட்டிபோட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரீசன் திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திமுக வளர்ந்துள்ளது." என்றார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அய்யா செல்லூர் ராஜூ நீங்களா? தெர்மாகோல் மேட்டரை மிஞ்சிய தவெக எம்எல்ஏ! குப்பைக்கு குபீர் ஐடியா! -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications