திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பிஷப் செய்யற காரியமா இது?.. திருச்சியிலிருந்து சென்னை வந்து.. அள்ளி சென்ற போலீஸ்!

மோசடியில் ஈடுபட்ட சென்னை பிஷப் அதிரடி கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

திருச்சி: ஒரு கிறிஸ்தவ பிஷப் செய்யற காரியமா இது? இவரை ரவுண்டு கட்டி தூக்கி உள்ளே வைத்துவிட்டனர் குற்றப்பிரிவு போலீசார்!

தமிழகம் முழுவதும் அட்வென்ட் சர்ச் இயங்கி வருகின்றன... இதற்கு சொந்தமாக ஏராளமான ஸ்கூல்களும், மற்றும் சர்ச்சுகளும் இயங்கி வருகின்றன.. இதில் சென்னை மாவட்ட பிஷப்பாக உள்ளவர் எஸ்டி டேவிட்.

 Chennai Bishop arrested for cheating case by Trichy police

இவரின் நிர்வாகத்தின்கீழ் 100 சர்ச், 50 பள்ளிகள் உள்ளன. இதைதவிர, திருப்போரூர், சிட்லப்பாக்கம் பகுதிகளில் உள்ள அட்வென்ட் பள்ளிகளுக்கு தாளாளராகவும் உள்ளார்... இந்த அட்வென்ட் சர்ச்சுக்கு சொந்தமான இடம், வேளச்சேரியில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.

இந்த இடத்தில் புதிதாக பள்ளி கட்ட திருச்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் டேவிட்டிடம் ரூ.26 கோடிக்கு விலை பேசி, முன் பணமாக கடந்த வருடம், பல்வேறு கட்டங்களாக வங்கியில் ரூ.3.85 கோடியை கொடுத்துள்ளார். இந்த பணத்தை சர்ச்சுக்கான வங்கி கணக்கில் போடாமல் டேவிட் எடுத்துக்கொண்டுள்ளார். இடத்தை சத்தியமூர்த்திக்கு கொடுக்கவில்லை.

கடைசிவரை அந்த இடத்தை கிரயம் செய்து தராமல், வாங்கிய பணத்தையும் அவருக்கு திருப்பி தராமல் இழுத்தடித்து கொண்டு வந்திருக்கிறார்.. பொறுத்து பொறுத்து பார்த்த சத்தியமூர்த்தி, இதுகுறித்து கமிஷனர் ஆபீசில் புகார் தரவும், திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீஸார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணையையும் ஆரம்பித்தனர்.

கோவையில் பரிதாபம்.. பக்கவாதத்தால் மனைவி மரணம்.. அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவர்!கோவையில் பரிதாபம்.. பக்கவாதத்தால் மனைவி மரணம்.. அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவர்!

அந்த விசாரணையில், எஸ்டி டேவிட் செய்த பண மோசடியில் அட்வென்ட் சர்ச் செகரட்ரி பன்னீர்செல்வம், பொருளாளர் ஸ்டீபன்சன், புரோக்கா் நெல்லை சாமுவேல் ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சென்னையிலிருந்து திருச்சிக்கு டேவிட்டை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.. முறைகேடு செய்தது உண்மைதான் என்றும் வெட்ட வெளிச்சமானது.

இதையடுத்து அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலிலும் அடைத்தனர். ஆனால், இதில் தொடர்புடைய பன்னீா்செல்வம், ஸ்டீபன்சன், புரோக்கர் சாமுவேல் ஆகியோர் எஸ்கேப் ஆகி உள்ளனர்.. அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள். டேவிட்டின் பிஷப் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டதாம், தற்போது, பணி நீட்டிப்பில் இருந்து வருகிறாராம்.. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கேஸ் தொடரப்பட்டு அது நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai Bishop arrested for money and land cheating case by Trichy police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X