சீனியர் Vs ஜுனியர்! முக்கிய பதவிகளுக்கு திருச்சி திமுகவில் மல்லுக்கட்டு! முட்டி மோதும் உ.பி.கள்!
திருச்சி : திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கட்சியில் மாநகர் மாவட்ட அளவில் முக்கிய பதவிகளை பிடிப்பதற்காக திருச்சி திமுகவில் அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் முட்டி மோதி வரும் நிலையில், உட்கட்சி தேர்தல் விவகாரம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகள் தவிர்த்து மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு வரையறையை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

திமுக உட்கட்சி தேர்தல்
தற்போது மாநகர, வட்ட செயலாளர் தேர்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது ஒன்றிய செயலாளர்கள் தேர்தல் நடைபெற்று வருகின்றன. பகுதி செயலாளர் நியமன பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒன்று இரண்டு நாட்களில் ஒன்றிய செயலாளர்களுக்கான பட்டியல் வெளியிடப்படும் என தெரிய வருகிறது. இந்த தேர்தல்கள் முடிவற்ற பின்னர் மாநகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர் தேர்தல், அதன்பிறகு திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

நிர்வாகிகளிடையே போட்டி
தமிழகம் முழுவதும் புதிதாக பதவிகளை கைப்பற்ற திமுக நிர்வாகிகளிடையே போட்டி நிலவும் நிலையில் ஒரே மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வேறு வேறாக இருக்கும் மாவட்டங்களிலும், ஒரே மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருக்கும் மாவட்டங்களிலும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சி, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் பதவிகளை கைப்பற்றுவதில் இருதரப்பு ஆதரவாளர்களிடையே கடும் போட்டி நிலவில் வரும் நிலையில் உட்கட்சித் தேர்தல் தீவிரம் அடைந்துள்ளது.

திருச்சி மாவட்ட திமுக
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட அளவிலான பதவிகளை கைப்பற்றுவதற்கு திமுகவின் முக்கிய அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்ட திமுக தற்போது வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 36 வார்டுகள் தெற்கு மாவட்டத்திலும் 29 வார்டுகள் மத்திய மாவட்டத்திலும் இருக்கின்றன. மாநகர திமுக ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்த நிலையில் தற்போது மத்திய, தெற்கு என செயல்பாடுகள் ரீதியாக இரண்டாகவே உள்ளது.
Recommended Video

கடும் போட்டி
தற்போது பகுதி செயலாளர்கள், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் தேர்தல் நிறைவடைந்து அறிவிப்புகள் வெளியாக இருக்கும் நிலையில் மாவட்ட அளவிலான மற்ற பதவிகளை கைப்பற்றுவதற்கு அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்களிடையே போட்டி உள்ளது. மாநகராட்சி மேயர் தேர்தலின் போதே திமுகவில் இருவருடைய மோதல் வெளிப்படையாக இருந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான அன்பழகன் மேயராக நியமிக்கப்பட்டார். இதனால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்கள் சற்றே அதிருப்தி அடைந்தாலும் தற்போது மாவட்ட அளவிலான குறிப்பாக மாநகர பகுதிகளில் இருக்கும் பதவிகளை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் திருச்சி மாவட்ட திமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications