திருச்சியில் 8 தொகுதிகளில்... நேரடியாக மோதும் அதிமுக vs திமுக... தொண்டர்கள் உற்சாகம்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 8-இல் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2016 தேர்தலில் திருச்சி கிழக்கு (கே.என். நேரு), திருவெறும்பூா் (அன்பில் மகேஷ் பொய்யாமொழி), லால்குடி (செளந்தரபாண்டியன்), துறையூர் (ஸ்டாலின்குமாா்) ஆகிய 4 தொகுதிகளிலும் திமுக வென்றது.
இதர 5 தொகுதிகளில் அதிமுக வென்றது. தற்போதைய தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தலா 8 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில், கடந்த முறை போட்டியிட்டு வென்ற அனைவருக்கும் திமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மற்ற தொகுதிகளில் யார்?
மேலும் ஸ்ரீரங்கத்தில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளர் பழனியாண்டிக்கு, மீண்டும் இந்த முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை தொகுதி மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூரில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றியை இழந்த கணேசனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இம்முறை திமுக வேட்பாளராக எஸ். கதிரவன் களமிறக்கப்பட்டுள்ளார்.

காங்கிரசுக்கு பதில் திமுக
கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதி இந்த முறை திமுக உறுப்பினரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கிய முசிறி தொகுதியை இந்த முறை திமுக வடக்கு மாவட்டச் செயலரான காடுவெட்டி தியாகராஜனுக்கு வழங்கியுள்ளது திமுக தலைமை.

8 தொகுதிகளில் அதிமுக
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி ), மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், அதிமுக சார்பில், 8 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். லால்குடி தொகுதி மட்டும் தமாகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதர 8 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக vs அதிமுக
மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேருக்கு நேர் களம் காணவுள்ளனர். இதன்படி, ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன், திமுக வேட்பாளர் பழனியாண்டி (கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தவர்) திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அதிமுக வேட்பாளர் வி. பத்மநாதன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

நேரடி போட்டி
திருவெறும்பூரில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்பி ப. குமார், திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; மண்ணச்சநல்லூரில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி, திமுக வேட்பாளர் எஸ். கதிரவன்; முசிறி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம். செல்வராசு, திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன்; துறையூா் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி. இந்திராகாந்தி, திமுக வேட்பாளர் ஸ்டாலின்குமாா் போட்டியிடுகின்றனர். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளிலும் தலா 8 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரவெடிகள், மேள, தாளங்கள் முழங்க தொகுதி முழுவதும் வலம் வரத் தொடங்கியுள்ளனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்












Click it and Unblock the Notifications