ஏற்கனவே ரொம்ப க்ளோஸ்.. ‘அந்தளவுக்கு சிறப்பான ஆட்சி’ - ஓபிஆர், ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
திருச்சி : திமுக அரசின் திட்டத்தை வரவேற்றதன் மூலம் ஓபி ரவீந்திரநாத் ஏற்கனவே திமுக உடன் இருக்கும் தனது நெருக்கத்தை வெளிக்காட்டியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் பங்கேற்றார் எடப்பாடி பழனிசாமி
பின்னர் சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிலவி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி வந்த ஈபிஎஸ்
திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். முன்னதாக, திருச்சி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் திரண்டு நின்று, எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

நெருக்கத்தை காட்டிட்டார்
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். அதில் விசாரணை முடிந்த பின்பு தான் தெரியும். அதற்கிடையில் அதுகுறித்து கருத்து கூற முடியாது. திமுக அரசின் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்றதன் மூலம் ரவீந்திரநாத் ஏற்கனவே தி.மு.க உடன் இருக்கும் நெருக்கத்தை வெளிக்காட்டியுள்ளார். ஏற்கனவே அவர் திமுகவுடன் தொடர்பில் தான் இருந்தார். அதனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தல் நிலைதான்
திமுகவில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடக்கும் என உங்களுக்குத் தெரியாதா? தோல்வியடைந்த வேட்பாளர்களை எல்லாம் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தினோம். ஆனால் தி.மு.க உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை. கூட்டுறவு சங்க தேர்தலையும் அவர்கள் நேர்மையாக நடத்த மாட்டார்கள். இருப்பினும் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் எனப் போராடுவோம்.

இலவசங்கள்
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. இலவசங்கள் வழங்குவது தவறு என பிரதமர் மோடி கூறுவது அவரது கட்சியின் நிலைப்பாடு. எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, எனது ஆட்சியிலும் சரி எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைத்தான் செயல்படுத்துவோம்.

ஆன்மீகம்
ஆன்மீகம் என்பதெல்லாம் அவரவர் விருப்பம். இது ஒரு ஜனநாயக நாடு. அவரவருக்கு அவரவர் மதம் புனிதமானது. இதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நான் எல்லா சாமியையும் கும்பிடுவேன். ஆன்மீகம் என்பது இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல. இஸ்லாமியர், கிறிஸ்தவர்களும் ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் தான். அவரவர் விருப்பப்படி வணங்குவார்கள்.

ஒரே முதலமைச்சர்
போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதலமைச்சர் அதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார். சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். அந்தளவுக்கு சிறப்பான ஆட்சி நடத்தும் முதலமைச்சர். மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் தி.மு.க செயல்படுத்தவில்லை." எனத் தெரிவித்தார்.
-
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications