அரிசி விலை உயர்வு, காவிரி நீர் பிரச்சனை.. தவெக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், சம்பா சாகுபடிக்கு ஜனவரி மாதம் வரை தண்ணீர் தேவை என்றும், காவிரி நீர் திறப்பில் அரசிடம் திட்டமில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி கே.பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சம்பா சாகுபடிக்கு ஜனவரி மாதம் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. கர்நாடகாவிலிருந்து உரிய காவிரி நீரைப் பெறாததால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

edappadi-palaniswami-slams-tn-government-over-rising-rice-prices-and-cauvery-water-shortage

விலை உயர்வு

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குத் தமிழக அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்குத் தேவையான உரிய நீரை கர்நாடக அரசு வழங்க பாரத பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட தமிழக அரசு வலியுறுத்தவில்லை.

குடிநீர் தேவை

தமிழக அரசு முறையான திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. இதனால், தமிழக மக்களின் எதிர்கால குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+